அரசியலுக்காக தேசிய விருதுகளின் மதிப்பைக் குலைக்க வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

அரசியலுக்காக தேசிய விருதுகளின் மதிப்பைக் குலைக்க வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக. 26 -  மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசால் 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 24.8.2023 அன்று அறிவிக்கப்பட் டன. இதுதொடர்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாக தேர்வாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படக் குழுவினருக்கு என் பாராட்டுகள்.

மேலும், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாட லுக்காக சிறந்த பின்னணி பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், ‘கருவறை’ ஆவணப் படத்துக்காக சிறப்பு சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் சிறீகாந்த் தேவா, சிறந்த கல்வி திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்கு தேர்வாகியுள்ள ‘சிற்பி களின் சிற்பங்கள்’ படக் குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப் படம் என நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக் கணிக்கப்பட்ட திரைப்படத்துக்கு (‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’) தேசிய ஒருமைப்பாட் டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப் படங்க ளுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான், அந்த விருது களை காலம்கடந்தும் பெருமைக்கு உரியவையாக உயர்த்திப் பிடிக்கும். 

மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர் குலைக்கக் கூடாது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment