பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இனிய தோழர்களே! வணக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?

இந்த  வினாவுக்கான  விடையில் இருக்கிறது, அடுத்தடுத்த தலைமுறையின் வாழ்க்கை.

அறிவியல் மனப்பான்மை  என்பது  அறிவியல் அறிவி லிருந்து வேறுபட்டது. மக்களுக்கு அறிவியல்  அறிவு  இருக்கிறது. ஆனால்... அறிவியல் மனப்பான்மை இருக்கிறதா?

இந்த நிலை மாறிட அறிவியல் இயக்கமாம்  பகுத்தறிவாளர் கழகம்  முன்னெடுக்கும் ‘அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம் . . .  அறியாமை இருளை நீக்குவோம்’  என்னும் முழக்கத்தோடு,  ஆகஸ்ட் 20 ஆம் நாளை   SCIENTIFIC TEMPER DAY [அறிவியல் மனப்பான்மை நாள்] என   FIRA [ FEDERATION OF INDIAN RATIONALAIST ASSOCIATION]   அறிவித்துள்ளதை  ஏற்று,  பகுத்தறிவாளர் கழகப் புரவலர்  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள்  தமிழ்நாடு  முழுவதும் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை  ’அறிவியல் மனப்பான்மை நாள்’  செயல் திட்டங்களை செயல்படுத்திட  அறிவுறுத்தி  உள்ளார்கள்.

அதன்படி,  அறிவியல்  மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு ஆசிரியர் அறிவுறுத்தலின்படி ஆகஸ்டு 20 முதல் 31 வரை செயலாற்றிட வேண்டுகிறோம் .

ஆசிரியர் அவர்களது  அறிக்கையில்  கண்டுள்ளபடி,  மாவட்ட நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்  உடனடியாக  மாவட்டத்தில் உள்ள மற்ற  பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு  ஒருங்கிணைத்து  திட்டமிடுங்கள்.

பொதுவெளியில் நடத்தும்போது காவல்துறை அனுமதி பெறுங்கள்.

நிகழ்வு அழைப்பிதழில்,

இந்த இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு  51 A [H]    “இந்திய நாட்டின் ஒவ்வொரு  குடிமகனும்  அறிவியல்  மனப்பான்மை  [SCIENTIFIC TEMPER] மனிதநேயம் [HUMANISM], ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு ஆராயும் திறன் [SPIRIT OF INQUIRY],  சீர்திருத்தம்  [REFORM] ஆகியவற்றை வளர்ப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும்”  என்று கூறுகிறது  என்பதை அச்சிடுங்கள்.

சொற்பொழிவாளர்களைத்  தொடர்பு கொண்டு  நிகழ்வு தேதியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் வருகை நேரம், தேவைப்படின் தங்கும் வசதி, வழிச்செலவு, முதலியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.

 நிகழ்வுக்கு  தேவையானவற்றை  குறித்துக் கொண்டு பட்டியலிட்டு விடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 உள்ளூர்  ஊடகங்களுக்கு செய்தி தெரிவியுங்கள்.

 மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவன  ஊழியர்கள், பொதுமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள்  என அனைவரையும் விளம் பரங்கள் சென்றடையுமாறு  செய்யுங்கள்.

நிகழ்வு  முடியும்  பொழுது,  பார்வையாளர்கள்  நாம் அறிவியலின் பக்கமே  இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதற்கு துணை நில்லுங்கள். 

உங்கள் செயல்பாடுகளை விளக்கும் சுவரொட்டியின்  தோற்றம்  ஆகியவற்றில்  THE RATIONALIST FORUM, TAMILNADU, NATIONAL SCIENTIFIC TEMPER DAY   என்பது ஆங்கிலத்திலும், பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு  அறிவியல் மனப்பான்மை நாள் என்பது தமிழிலும் இருக்குமாறு அமைத்திடுங்கள்.

 நிகழ்வின் அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் அனுப்பிடுக.தொடர்புடைய பேச்சாளர்களுக்கும் அனுப்பிடுக.

ஒலி. ஒளி அமைப்பை தரமாக அமையுங்கள்.

நிகழ்வை சரியான நேரத்தில் தொடங்கி விடுங்கள்.

 நிகழ்வின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் அனுப்பிடுக.

 நிகழ்வு  முடிந்த  அன்று  நிகழ்வைத்  தொகுத்து  தெளிவான ஒளிப்படத்துடன்  விடுதலை  நாளிதழுக்கு  செய்தி  அனுப்பி விடுங்கள். அனைத்தையும் நிறைவாகச் செய்து ‘அய்யா  பணி  முடிக்க.... ஆசிரியர் வழி நடப்போம்.. வாரீர்! வாரீர்!  என அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு... எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

  அன்புடன்:

இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர்) 9677011415, ஆ.வெங்க டேசன் (பொதுச் செயலாளர்) 9840606428, வி.மோகன் (பொதுச் செயலாளர்) 9944994847, பகுத்தறிவாளர் கழகம்,  தமிழ்நாடு


No comments:

Post a Comment