ஆங்கிலத் துறைக்கும் முழுக்குப் போடத் தயாராகும் பல்கலைக் கழகங்கள் 'சனாதன இலக்கிய'த்தை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

ஆங்கிலத் துறைக்கும் முழுக்குப் போடத் தயாராகும் பல்கலைக் கழகங்கள் 'சனாதன இலக்கிய'த்தை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்!

அகமதாபாத், ஆக.23 புதிய கல்விக் கொள் கையின் கோரமுகம் மெதுவாக வெளிப்படுகிறது.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை, இந்த கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு இளங்கலை சேர்ந்த மாணவர் களுக்கு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள் கையின்படி  வடிவமைக்கப்பட்ட   ’சனாதன இலக்கியம்’ என்ற பாடப்பிரிவை  அறிமுகப்படுத்தி உள்ளது

ஹிந்து மதத்தின் வேர்களாக உள்ள வேதங்கள், மனுசாஸ்திரம், உபநிடதங்கள் மற்றும் ஹிந்துமத சாஸ்திரங்களை  கொண்ட 'சனாதன இலக்கியம்' மனிதர்களின் அமைதியான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் அற நூல்களாம். இதை மக்கள் கற்பது மிகவும் தேவையானதாம்.

 இந்தியாவில்  உள்ள பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத் துறை மிகவும் முக்கியமானது.   பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.  அந்த ஆங்கிலத் துறையில் இப்போது ’சனாதன இலக்கியம்’ குறித்த பாடத்திட்டத்தை  முதலில் சயாஜிராவ் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் முக்கியமாக வேதங்கள் மற்றும் உபநியாசங்களின் ஆய்வுகளின் போதனைகள் அடக்கமாம்.

இப்பல்கலைக்கழகம் நாட்டிலேயே இப்படி ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்தக் கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு இளங்கலையில் சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய கல்விக் கொள்கை (ழிணிறி) 2020 கட்டமைப்பின் கீழ் ’சனாதன இலக்கியம்’ சேர்க்கப்பட்டுள்ளது. இதனை 160 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனராம். இதற்காக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் பருவத்தில் மாணவர்களுக்கு 'உபந்யாசம்' அடிப்படையிலான கதைகளும் இரண்டாம் பருவத்தில்  'பகவத் கீதை' மற்றும் பிற வேதங்கள் ஸ்மிரிதிகள் கற்பிக்கப்படுமாம்.

சனாதன இலக்கியத்துறையை அறிமுகப் படுத்திய அத்துறைத்தலைவர் பேராசிரியர் ஹிதேஷ் ரவியா கூறும் போது ”இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக் கழகமும் சனாதன் என்ற சொல்லையோ அல்லது பெயரிடலையோ பயன்படுத்தவில்லை. 'சனாதன்' இலக்கியம் என்பது ஹிந்துத்துவ அரசியலோடு  கலந்த ஒன்றாகும். ஏற்கெனவே பள்ளிப்பாடங்களில்   சமய நூல்கள், இதிகாசங்கள், தத்துவக் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பிற இலக்கியப் படைப்புகள் உள்ளிட்ட பலதரப்பட்ட நூல்கள் கற்பிக்கப்படுகின்றன.

 ஆனால் சனாதன இலக்கியம் என்ற பெயரில் குறிப்பாக ஹிந்துத்துவ அமைப்புகள் கூறிவரும் மனுஸ்மிருதி, உபந்யாசம், வேத மற்றும் சாஸ்திர சுலோகங்கள்  போன்றவை நமது கலாச்சாரப் படைப்புகள். இவை காலத்தால் அழியாதவை. ஆகவே  சனாதன இலக்கியம் முக்கியமானது" என்றார். 

 மேலும் "உபந்யாசத்தில் இந்திரன் மற்றும் விரோசனன், ஸ்வேதகேது, சத்யகாம ஜபால மற்றும் உத்தாலக உபந்யாசங்கள் சாந்தோக்ய உபநிஷத்தின் கதைகள். இவற்றின் உருவாக்கம் அதன் விரிவான விளக்கம், ஸ்லோகங்கள்  மற்றும் அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் தற்கால எடுத்துக்காட்டுகள் போன்றவைகளோடு கற்பிக்கப்படும்.  கடந்த காலங்களில்  சனாதனக் கொள்கைகளை பேசவே தயங்கினார்கள். பல்கலைக்கழகங்கள் இதனை தவிர்த்தே வந்தன. இதனால் மாணவர்களுக்கு நமது கலாச்சாரம் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்பு அற்ற சூழல் உருவானது”  என்று ஹிதேஷ் ரவியா கூறினார். 

மேலும் அவர் கூறியதாவது: இந்திய இலக் கியம் என்று கூறிக்கொண்டு நாம் பெயரளவிற்கும், கலாச்சாரத்திற்கும் உதவாதவைகளை கற்பிக் கின்றோம். உண்மையில் இந்திய இலக்கியம் என்பது சனாதன இலக்கியம். இதனைக் கற்கும் போது உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் பிற மத நூல்களுடன் தொடர்பு கொள்கிறோம், முதல் பருவத்தில்  'கதோ உபநிஷத்' மற்றும் 'சாந்தோக்ய உபநிஷத்' கதைகளில் எளிமையாக துவங்கி, மூன்றாம் பருவத்தில் இலக்கியத்தின் மூலக்கருத்துகள் மற்றும் பகவத் கீதையின் சாராம்சம் போன்றவை கற்பிக்கப்படும்.  புதிய கல்விக்கொள்கையில் இந்திய இலக்கியத்தின் அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.  இது நமது கலாச்சாரத்தைக் பாதுகாக்கப் பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். முதல்முதலாக  குஜராத் மாநிலம் இந்திய கலச்சாரத்தைக் எடுத்துச் சொல்லும் பணியில் இறங்கி உள்ளது. வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களும்  சனாதன இலக்கியங் களை அறிமுகப்படுத்தவேண்டும்," என்றும் அவர் கூறினார். 

அங்கே கைவைத்து, இங்கே கை வைத்து கடைசியில் ஆங்கிலத்திலும் கை வைத்து இருக்கிறது - சங்பரிவார்  கூடாரம்.

No comments:

Post a Comment