ஏழுமலையானுக்கு அச்சமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

ஏழுமலையானுக்கு அச்சமா?

திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானதாம்!

திருப்பதி, செப். 8  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மேலே வானத்தில் விமானம் பறந்தது. ஆகமசாஸ்திர விதிகளுக்கு எதிரானது என்றும் விமானம் பறக்க தடை இருக்கும் போது எப்படி பறந்தது என்றும் தேவஸ்தானம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது. திருமலை வழியாக விமானங்கள் பறக்கக்கூடாது என்று விமானப் போக்குவரத்துத் துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறது. ஆனால், விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், திருமலை விமான போக்குவரத்து தடை மண்ட லம் அல்ல என்றும், விமானப் போக்கு வரத்து அதிகரிக்கும் போது, திருமலை வழியாகப் போக்குவரத்துத் தவிர்க்க முடியாதது என்றும், கூறுகிறார்கள். இதற்கிடையே, கடந்த 3 மாதங்களில் மட்டும் திருமலையில் ஏழுமலையான் கோவில் மேலே 4 முறை விமானங்கள் வட்டமடித்து பறந்துள்ளன என்றனர்.


No comments:

Post a Comment