பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி!


இந்திய பள்ளி விளையாட்டுகள்  கூட்டமைப்பு (SGFI) நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மு.முகமது ஆதில் பங்கேற்று, வெற்றி வாகை சூடினார். வெற்றி பெற்ற மாணவர் மு.முகமது ஆதில் டிசம்பர் முதல் வாரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு(SGFI) நடத்தும் 67ஆவது தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அளப்பரிய சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவரை பள்ளியின் நிறுவனர்,தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment