கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

25.10.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை: 

👉மருது சகோதரர்கள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு அரசு மறந்து விட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அரசு அமையும் போதெல் லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப் படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத்தந்தை காந்தியின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்” என முதலமைச்சர் பதிலடி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 விருப்ப ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய பதவி யில் நியமித்துள்ளார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்.

👉"வரலாற்றுத் தவறுகளை" சரி செய்வதில் உறுதியான நடவடிக்கையின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், "ஜாதி உயரடுக் கின்" வாதங்களை நிராகரிக்க அழைப்பு விடுத்தார், "வர லாற்றுத் தவறுகளை சரி செய்வது எந்தவொரு அரசமைப் பின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்," அதற்கு  "பிரதிநிதித்துவம் என்பது ஒரே ஒரு வழி" என்றும் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉அந்நிய சக்திகளால் தான் மணிப்பூரில் பிரச்சினை என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பு மறுப்பு. தற்போதைய அரசாங்கம் மார்ச் 2017 இல் மாநிலத்தில் ஆட்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பு இரு தரப்புக்கும் இடையில் ஏன் மோதல்கள் ஏற்படவில்லையே எனக் கேள்வி.

தி ஹிந்து:

👉சந்திராயன் வெற்றி மோடியின் சாதனை என்றும், வேத காலத்திலேயே விமானங்கள் இருந்தது என்றும் என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள புத்தகக் குறிப்புக்கு கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள் கண்டனம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment