மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைப்பேசி வழியே நடத்தக் கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைப்பேசி வழியே நடத்தக் கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல்

திண்டுக்கல்,அக்.23- தமிழ்நாட்டில், மாற்றுத் திறனாளி களுக்கு துறை ரீதியாக வழங்கப்படும் திட்டங்கள் முழு மையாக அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற் காக மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர்? என கணக்கெடுத்து வருகின்றனர். 

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக் கெடுப்பு தொலைப்பேசி வாயிலாக நடத்தப்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. எனவே இந்த நடைமுறைக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு என்பது நேரில் சென்று தான் எடுக்க வேண்டும். தொலைப்பேசி வழியாக விசாரித்தால் முழுமையான விவரங்கள் பெற முடியுமா?. காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை செய்கை மொழி மூலமாகத்தான் தொடர்பு கொள்ள முடியும்.

எனவே தொலைப்பேசி வழியாக அழைத்து மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்கள் எவ்வாறு பெற முடியும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தொலைப்பேசி வாயி லாக மாற்றுத்திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பை நிறுத்த வேண்டும். மேலும் நேரடியாக பணியாளர்கள் சென்று கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment