ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் மறியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் மறியல்

சென்னை, அக்.22 - ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன்பு எஸ்.ஆர்.இ.எஸ். ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் 20.10.2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாக பொதுச் செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். 

இதில், ரயில்வே துறையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். பயிற்சி முடித்த ஊழியர்களுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்.

ரயில்வே மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும். பணிமனைகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத் தில், பொதுச் செயலாளர் சூரிய பிரகாசம், நிர்வாக தலைவர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment