பெரியார் நூற்றாண்டு பள்ளி மாணவி - விண்வெளி வீராங்கனை ஆடை வடிவமைப்புப் போட்டியில் வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

பெரியார் நூற்றாண்டு பள்ளி மாணவி - விண்வெளி வீராங்கனை ஆடை வடிவமைப்புப் போட்டியில் வெற்றி!

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, திருச்சி, ஜமால் முகம்மது கல்லூரி 6.10.2023 முதல் 8.10.2023 வரை,  பள்ளி  மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பல் வேறு பிரிவுகளில் விண் வெளித் துறை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு போட்டிகள் இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ராஜசிறீ ஆடம்பர ஆடை அலங்காரப் போட்டியில்  விண் வெளி வீராங்கனை போல் மிகச் சிறப்பாக பங்கேற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றிக் கனியை எட்டிப் பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவி ராஜசிறீக்கு பள்ளி முதல்வர், இரு பால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment