சென்னையில் கன மழை களப்பணியில் 23,000 பணியாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

சென்னையில் கன மழை களப்பணியில் 23,000 பணியாளர்கள்

சென்னை, நவ. 15 -  திரு.வி.க. நகர், அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகாலில் மழை நீர் சீராக வெளியேறுவதை மேயர் ஆர்.பிரியா நேற்று (14.11.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், தலைமைப் பொறி யாளர் (பொது) எஸ்.ராஜேந் திரன் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்துவருகிறது. 

இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங் களில் மாநகராட்சியின் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், மண் டல அலுவலர்களுடன் ஒருங்கி ணைந்து நேற்று காலைமுதல் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

சென்னை திருவிக நகர் மண்ட லத்துக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரிநல்லா கால் வாயில் மழைநீர் வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து அங்கா ளம்மன் கோயில் தெருவில் மழை நீர் வடிகாலில் மழைநீர் சீராக வெளியேறுவது, டெமல்லஸ் சாலையில் நீரேற்று நிலையத்தின் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அதேபோல துணை மேயர் மகேஷ்குமார் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஆதித் தனார் சாலை மற்றும் பாரதி சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழைக்கான நடவடிக் கைகளை நேரில் ஆய்வு செய்தார். 

மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், அடை யாறு அய்ந்து பர்லாங் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண் டல் கழிவுகளை அகற்றும் பணி களை சோதனையிட்டார்.

மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் பல்வேறு இடங் களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த இடத்தி லும் மழைநீர் தேங்கவில்லை. சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை.

முன்னெச்சரிக்கையாக அனைத்து சுரங்கப் பாதைகளி லும் கண்காணிப்பு கேமராக்களும், அலர்ட் சிக்னல்களும் பொருத்தப் பட்டுள்ளன. 

பருவ மழையையொட்டி 23 ஆயிரம் மாநகராட்சி பணியாளர் கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கூடுதலாக வார் டுக்கு 10 பேர் என 2 மாத காலத் துக்கு பணியில் ஈடுபடுத்தப்படவுள் ளனர்.

மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment