பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வு கால அட்டவணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வு கால அட்டவணை

சென்னை, நவ. 16- பத்தாம் வகுப்பு பிளஸ் ஒன் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:- 

2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. 

மார்ச் 26ஆம்தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10இல் வெளியிடப்படும். 

11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ஆம்தேதி தொடங்கி 24ஆம்தேதி முடிவடைகிறது. 

பொதுத்தேர்வு 2024 மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம்தேதி நிறைவு பெறும். 

மே 14ஆம்தேதி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி முடிவடைகிறது. 

மார்ச் 1ஆம்தேதி தொடங்கி மார்ச் 22ஆம்தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment