"தந்தை பெரியார் நகர்" பெயர் சூட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

"தந்தை பெரியார் நகர்" பெயர் சூட்டல்

கோவை சரவணம்பட்டியில் "அரிஜன காலனி" என்ற பெயரை மாற்றக்கோரி நீண்ட காலம் கோரிக்கையும், போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றும் கோரிக்கை ஏற்கப்படாமலிருந்தது.  தற்போது உள்ளாட்சி அமைப்பால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு "தந்தை பெரியார் நகர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாதியின் அடையாளமாய் இருந்த பழைய பெயர் மாற்றப்பட்டு ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட "தந்தை பெரியார்" பெயர் சூட்டப்பட்டிருப்பதை நாங்கள் பெரிதும் வரவேற்று மகிழ்கிறோம், பெருமை கொள்கிறோம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment