
செந்துறை, டிச. 2- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வங்காரம் கிரா மத்தில் வசிக்கும் நாராயணசாமி செல்வநாயகம், சுப்பிரமணியன் மலர்க்கொடி ஆகியோரின் அன் புத்தாயாரும் சின்னசாமி அவர் களின் மனைவியுமான அலமேலு அம்மாள் (வயது 89) அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (1.1.2024) காலை 11 மணியளவில் வங்காரம் கிராமத்தில் மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் நடைபெற்றது.
இராவணன் மற்றும் கழக மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்று இரங்கல் உரையாற்றினர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி படத்தினை திறந்து வைத்து இரங் கல் உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் ஊர் பெரியவர் களும், சான்றோர்களும், மறைந்த அம்மையாருடைய குடும்ப உறுப் பினர்களும் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் அம் மையார்தம் குடும்ப வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டினையும், சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தலைவர் தந்தை பெரியார் அவர்களது தொண் டினால் உருவான பயன்களை பற்றி யும் எடுத்துக் கூறப்பட்டது. அனை வரும் எழுந்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment