
புதுடில்லி,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பற்றி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
சில நேரம் தொல்லைகளுக்கு உள்ளாக் கப்படும் உண்மைகளை நிச்சயம் தோற் கடிக்க முடியாது. இந்தியாவின் அரசியல் சாசனமும், ஜனநாயகமும் இன்றைய உச்ச நீதிமன்றம் உத்தரவால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதி மன்றத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சிக்கலான சூழலில் உச்ச நீதிமன்றம் உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி ஒன்றிய அரசின் செயல்பாட்டையும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment