
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு மின்னொளி அமைத்து தரக்கோரி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் திராவிடர் கழக தோழர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் மின்னொளி அமைத்துக் கொடுத்துள்ளார். 15.2.2024 அன்று கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் கழக பொறுப்பாளர்கள், காமராஜ், சங்கிலிமுத்து, ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆரோக்கியசாமி ஆகியோர் மேயர் அன்பழகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெரியார் புத்தகம் வழங்கினர்.
No comments:
Post a Comment