மந்திரம் போடுவதாக அழைத்துச் சென்று கொலை : இருவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

மந்திரம் போடுவதாக அழைத்துச் சென்று கொலை : இருவர் கைது

ராணிப்பேட்டை,பிப்.11- வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான சீனிவாசன் என்பவர், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும் செய்து வந்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சகோதரர் களான பிரகாஷ் மற்றும் கிருஷ்ணா ஆகியோரும், நெசவுத் தொழிலையும், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழி லையும் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த சீனிவாசனை, காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்துச் சென்ற சகோதரர்கள் இருவரும், அவரை சுத்தியால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment