சென்னை, டிச. 23- புரோ கபடி லீக் பாணியில் 32 மாவட்டங் களில் இருந்து 64 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு கபடிப்ரீ மியர் லீக் போட்டி சென்னை யில் சனிக்கி ழமை அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு கபடி, ப்ரீமியர் லீக் நிறுவனமும், பிராண்ட் மீடியா ஈவென்ட்ஸ் நிறுவன மும் இணைந்து தமிழ்நாடு அமெச் சூர் கபடி சங்கத்தின் ஆதரவோடு மாநில அள விலான இப்போட்டியை நடத்துகின்றன.
தமிழகம் முழுவதிலும் 32 வருவாய் மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரி வில் 32 அணிகளும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.
அணிக்கு 12 பேர் வீதம் ஆண்கள் பிரிவில் 384 வீரர் களும், பெண் கள் பிரிவில் 384 வீராங்கனைகளும் இந்த போட்டியில் பங்கேற்று தங் களது திறமையை வெளிப்ப டுத்த உள்ளனர்.
இவர்களில் திறமையான வீரர் கள் கண்டறியப்பட்டு தேசிய போட்டிக்கும், புரோ கபடி போட்டிக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
4 மண்டலங்களாகப்பிரிப்பு: 32 அணிகள் 4 மண்டலங் களாக பிரிக்கப்பட்டுள்ளன. தெற்கு மண் டலத்தில் மதுரை மண்டலம்) தூத்துக்குடி, கன் னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம், விருது நகர், மதுரை, திண்டுக்கல் அணிகளும், மேற்கு மண்ட லத்தில் கோவை மண்டலம்) கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர் மபுரி, கரூர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
வடக்கு மண்டலத்தில் (வேலூர் மண்டலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திரு வண்ணாமலை, விழுப்புரம், கட லூர், கிருஷ் ணகிரி அணிகளும், கிழக்கு மண்டலத்தில் (திருச்சி மண் டலம்) நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம் பலூர், புதுக்கோட்டை திருச்சி, சிவகங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஜன.25-இல் முதல் போட்டி தொடக்கம்: முதன்முதலாக நடத்தப்படும் தமிழ்நாடு கபடி ப்ரீமியர் லீக் போட்டியின் முதல் போட்டி மதுரையில் ரேஸ்கோர்ஸ் எம்.ஜி. ஆர். மைதானத்தில் வருகிற ஜன வரி 25 ஆம்தேதி தொடங்குகிறது.
கோவை மண்டல போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியும், வேலூர் மண் டலபோட்டி பிப்ரவரி 8 ஆம் தேதியும், திருச்சி மண்டல போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதியும் தொடங்குகின்றன.
மார்ச் 1-இல் இறுதி ஆட்டம்: ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் சென்னையில் பிப் ரவரி 27 ஆம் தேதி துவங்கும் காலிறுதிச் சுற்றில் பங்கேற் கின்றன.
இறுதிப்போட்டி மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது. தொழிலதிபர் அபிராமி ராம நாதன் போட்டிக்கான இலச் சினையை அறிமுகப்படுத்தினார்.
பிராண்ட் மீடியா ஈவென்ட்ஸ் நிறுவனர் இரா.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலை எம்.ராஜா, செய லாளர் ஏ.சபியுல்லா , தமிழ் தலைவாஸ் அணி வீரர் அஜித் குமார் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment