பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, ராஜஸ்தானில் 3 லட்சம் பேர் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 23, 2019

பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, ராஜஸ்தானில் 3 லட்சம் பேர் பேரணி


புதுடில்லி, டிச.23  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங் களில் நேற்றும் 10ஆவது நாளாக போராட்டங்கள் நடந் தன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங் களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடந்த  போராட்டங்கள் தீவைப்பு சம்பவங்களில் இது வரை 20 பேர் பலியாகி உள் ளனர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை நடந்த வன்முறைகளில் 15 பேர் பலி யாகினர். இந்நிலையில், மீரட் டில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் காயமடைந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம், இம்மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இச்சட்டத்தை எதிர்த்து 10ஆவது நாளாக நேற்றும் பல மாநிலங்களில் போராட் டங்கள் நடந்தன. அதே நேரம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்பி விட்டது.


ராஜஸ்தான்


மேற்கு வங்கத்திலும் அமைதி நிலவுகிறது. ஆனால், ராஜஸ் தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நேற்று அமைதிப் பேரணி நடத் தப்பட்டது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப் பினர் மற்றும் பொதுமக்கள் என 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட வில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளை மட்டுமே ஏந்தி சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக நேற்று முன்தினம் இரவு 8 மணி முதலே இங்கு இணையதள சேவை முடக் கப்பட்டது. பேரணியின் முடி வில் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “சிறுபான்மை மக்களின் மனதில் மத்திய அரசு அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழலையையும் உருவாக்கி உள்ளது. அதனால், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். பாஜ.வின் தேசிய வாதம் என்பது வெற்றிடமாக உள்ளது. மக்கள் அவர்களின் தந்திரங்களை நன்கு உணர்ந் துள்ளனர். அவர்கள் அராஜகத் துடன் ஆட்சி செய்கிறார்கள். பெரும்பான்மை உள்ளதால் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆனால், மக்களின் மனதை அவர்களால் வெற்றி பெற இயலாது. நாடு பற்றி எரிகிறது. பாஜ ஆளும் மாநிலங்களில் எல்லாம் வன்முறை சம்பவங்கள் நிகழ்கிறது,” என்றார்.


டில்லி


தலைநகர் டில்லியில் குடி யுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், காவல் துறையால் தாக்கப்பட்ட ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அமைதிப் பேரணி நடந்தது. இதேபோல்,  ஜந்தர் மந்தரில் வடகிழக்கு மாநி லங்களை சேர்ந்த மக்கள் திரண்டு, அமைதியாக போராட்டம் நடத்தினர். நிசாமுதீன் பாஸ்தி பகுதியில் உள்ள  முசாபிர் கானா பூங்காவில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.


உ.பி. அரசு தேர்வு ஒத்தி வைப்பு


உபி.யில் போராட்டங்கள் காரணமாக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இத னால் நாளை மறுதினம் நடைபெற இருந்த  துணைநிலை பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுகளில் கலந்து கொள்ப வர்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை தொடர்ந்து 24 மற்றும் 26ஆம் தேதி நடைபெற இருந்த ஜூனியர் உதவியாளர், கம்ப் யூட்டர் ஆபரேட்டர் உள் ளிட்ட பணியிடங்களை நிரப்பு வதற்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கருநாடகா


கருநாடகாவில் குடியுரிமை  திருத்த சட்டத்தை எதிர்த்து, தென்கனரா மாவட்டம், மங்க ளூருவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத் தினர். இதில், மங்களூருவை சேர்ந்த  ஜலீல் (49), நவ்ஷின் (23) ஆகியோர் இறந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடியூரப்பா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தோடு,  தலா ரூ.10 லட்சம் நிவா ரணத் தொகையும் அறிவித் தார்.


பீகார்


பீகாரில் நேற்று முன்தினம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நடத்திய முழு அடைப்பு போராட்டத்தின் போது வன்முறைகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட கட்சித் தொண்டர்கள், ஆட்டோ உள் ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று கட்சி தலைமை முதலிலேயே உத்தர விட்டு இருந்தது. ஆனால், அதையும் மீறி வன்முறையில் ஈடுபட்ட 3 பேரை, கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர். இவர்கள் மாவட்ட மற்றும் இளைஞர் அணி பதவிகளை வகித்து வந்தனர்.


குடியுரிமை திருத்த சட் டத்தில், 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் பாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானில் இருந்து இந்தி யாவுக்கு அகதிகளாக வந்த  முஸ்லிம் அல்லாத இந்து சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. இத னால், இந்தியாவில் தற்போது தங்கியுள்ள 40 ஆயிரம் ரோஹிங் கியா மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


டில்லி ரோஹிங்கியா அக திகள் முகாமை சேர்ந்த 18 வயதான இஸ்லாமிய பெண் கூறுகையில், “இந்திய குடி யுரிமை வழங்கப்படாத மற்றவர் களை விட,  எங்களின் நிலைமை மிகவும் மோசமானது. நாங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவோம். அப்படி அனுப்பப்பட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை. நான் அரசியலில் தலையிட விரும்ப வில்லை. ஆனால், நாட்டில் தற்போது நிலவும் சூழல் எங் களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது," என்றார்.


No comments:

Post a Comment