தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 23, 2019

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி


மும்பை, டிச.23 ”குடியுரிமை திருத்தச் சட்டத் தில் இலங்கைத்  தமிழர்களைப்  புறக்கணித்தது  ஏன்?''  என்று  தேசியவாத  காங்கிரஸ்  தலைவர்  சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.மகாராட்டிரா மாநிலம் புனேவில்செய்தியாளர்களிடம்  பேசிய  அவர், "குடியுரிமை    திருத்தச்    சட்டம்  நாட் டின் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்"  என்று  எச்சரித்துள்ளார். சிறுபான்மை யினரை  மட்டுமின்றி,மதச்சார்பற்ற      இந் தியா      மீது நம்பிக்கை  கொண்ட  அனைவரும் இதன்  மூலம்  பாதிக் கப்பட்டிருப் பதாக  தெரிவித்துள்ளார். குடியுரிமை  திருத்தச்  சட்டத் தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச  நாடுகள்  மட்டும்  சேர்க் கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய சரத்பவார்,    "லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்களைச் சேர்க்காதது ஏன்?' என்றும் வினவியுள்ளார்.


No comments:

Post a Comment