மோடியும், அமித்ஷாவும் இணைந்து இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டனர் ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 23, 2019

மோடியும், அமித்ஷாவும் இணைந்து இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டனர் ராகுல் காந்தி


புதுடில்லி, டிச.23 பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து, இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டனர்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, பல மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.


இந்நிலையில், 'சுட்டுரை' சமூக வலைதளத்தில், காங்., - எம்.பி., ராகுல் கூறியிருந்ததாவது: அன்பார்ந்த இளைஞர்களே! பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து, உங்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதது போன்றவற்றால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை, அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.


அதனால் தான் மோடியும், அமித் ஷாவும், வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு, அன்புக்குரிய நம்முடைய நாட்டை பிரிக்கின் றனர். ஒவ்வொரு இந்தியர் மீதும் நாம் காட்டும் அன்பால் மட்டுமே, நாம் அவர்களை வீழ்த்த முடியும்.இவ்வாறு, ராகுல் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment