நாகை, டிச.20 குடியுரிமைத் திருத்த சட்டத்தில் அ.தி. மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நாகையில்
தமிழர் தலைவர் பேட்டி
நேற்று (19.11.2019) நாகைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான இந்த இடத் தில், கஜா புயலுக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்களை எல்லாம் சரி செய்து, இந்த இடம் மேலும் தூய்மையாக்கப்பட்டு, ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களாலே சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாகையில், இந்த சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய திராவிட இயக்கத் தோழர்களையெல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்று, இந்த இடத்தில் சிறந்த படிப்பகம், நூலகம் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரில் சிறப்பாக உருவாக் குவதற்கும் நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயப் பணி - அறிவுப்பணி. அந்தப் பணிக்கு நாகை மாவட்டத் தோழர் கள், சுற்று வட்டாரத் தோழர்கள் அனைவரும் இதை ஒரு புது அமைப்பாகக் கருதி ஒத்துழைக்கவேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை விடுத்து, மேலும் பணிகள் சிறப்படையக் கூடிய வாய்ப்பை முன்னெடுக்கவேண்டும்.
எல்லோருக்கும் இது பயன்படவேண்டும், நூலகமாக, அறிவகமாக பயன்படவேண்டும் என்பதற்காகத்தான் - இந்தப் பணியைப் பார்வையிடுவதற்காக வந்த நேரத்தில், திராவிட இயக்கத் தோழர்கள் அத்துணை பேரையும் சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஊராட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது
வருகின்ற ஊராட்சி மன்ற உள்ளாட்சித் தேர்தல்களில், சிறப்பான வகையில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட் டணியை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சுயேச்சைகளாக நிற்கக்கூடியவர்கள் யார் யார் சமுதாயத் தொண்டினை செய்யக் கூடியவர்களோ அவர்கள் எல்லாம் வெற்றி பெறவேண்டும். அதுமட்டு மல்ல, சுதந்திரமான ஒரு ஆட்சி, நல்லாட்சியை உருவாக் குவதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் அடித்தளமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகத் தோழர் களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அ.தி.மு.க.வின் இரட்டை வேடம்!
செய்தியாளர்: குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா வினைக் கண்டித்து மாண வர்கள் கடுமையான போராட் டத்தில் இறங்கியுள்ளனர். அதேசமயத்தில், அ.தி. மு.க. அரசு, மத்திய அரசிற்கு ஆதரவு அளிக்கிறது. இது இரண்டும் எதைக் காட்டுகிறது?
தமிழர் தலைவர்: அவர்களுடைய இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இதுவரையில், அவர்கள் நீட்டை எதிர்க் கிறோம் என்று சொல்வார்கள். ஆனால், நீட்டை எதிர்க்காமல், அந்தத் தேர்வை தொடர்ந்து நடத்தி, அனிதாக்களிலிருந்து எத்தனையோ உயிர்ப்பலிகள் தொடரக் கூடிய வாய்ப்பை உருவாக்குவார்கள்.
அதுபோல, அரசியல் கொள்கைகளிலே, இரு மொழிக் கொள்கையைத்தான் அண்ணா வலியுறுத்தினார் என்று சொல்லி, அவ்வப்பொழுது மும்மொழிக் கொள்கை யான இந்தியைத் திணிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள்.
எனவேதான், இரட்டை வேடம், இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு என்பது இருக்கிறது.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில், அண்ணா தி.மு.க. பெயரிலே, பா.ஜ.க. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக் கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. இதை மாற்றுவதற்கு ஒரே வழி, வருகின்ற தேர்தலில் அவர் களுக்கு உரிய பாடத்தை மக்கள் கட்டுப்பாடாக இருந்து தரவேண்டும்.
அதேபோல, கூட்டணிக் கட்சிகளும் ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு, எதிரி களை மட்டுமே தங்கள் கருத்தில் கொண்டு, தங்களுக்குள் இருக்கும் சிறுசிறு மாச்சரியங்களை மறந்துவிட்டு பணி யாற்றவேண்டும் என்கிற வேண்டுகோளை வைக்கிறேன்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இருக்கிறதே, அது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டு மானத்திற்கு விரோதமானது.
அரசமைப்புச் சட்டம், மதச்சார்பற்றது
அரசமைப்புச் சட்டம், மாநில உரிமைகளைப் பாது காப்பது
அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சியை வலியுறுத்துவது.
இவை அத்தனைக்கும் விரோதமானதுதான் குடியுரி மைத் திருத்தச் சட்டம்.
எனவேதான், இதில் மனிதாபிமானத் தோடு அகதிகளை வரவேற்கவேண்டுமே தவிர, மதக் கண்ணோட் டத்தோடு பார்ப்பது என்பது இருக்கிறதே, அது கொடு மை யானது. அதிலும் குறிப்பாக, ஈழத் தமிழர் களுக்கோ மற்றவர்களுக்கோ இடமில்லாத ஒரு சூழலை இன்றைக்கு உருவாக்கி இருக்கிறது.
''பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?'' என்று சொல்வதுபோன்று, நேற்று முன்தினம் என்ன நடந்தது? நேற்று என்ன நடந்தது? என்று இலங்கைக்கு ஏதோ போராடிய வர்களைப் போல சொல்கிறார்கள்.
இலங்கை - ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்களை செய்தது திராவிட இயக்கங்கள்தான். திராவிட முன் னேற்றக் கழகமும், திராவிடர் கழகம்தான்.
ஒருமுறை அல்ல, இரண்டு முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்திருக்கிறது, ஈழத் தமிழர்களுக்காக - இந்த உண்மைகளை யாரும் மறைத்துவிட முடியாது.
எனவேதான், அதைக் கேட்பதற்கு முழுத் தகுதி, திராவிட இயக்கத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, திராவிடர் கழகத்திற்கு உரிமை உண்டு.
எனவே, எந்தக் கொம்பனும் இதற்குப் பதில் சொல்லக்கூடாது; அது வெட்கக் கேடானது. எனவே, மேலும் மேலும் இதற்கு மறுப்பு சொன்னால், தளபதி ஸ்டாலின் அவர்கள் சொன்னதற்கோ, மற்றவர் களுக்கோ பதில் சொன்னால், மல்லாந்து படுத்துக்கொண்டு அவர்கள் மார்பின்மீது துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள்.
அ.தி.மு.க.வில் கொள்கை உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்!
செய்தியாளர்: ஊராட்சி மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு எதிராக, அதே கட்சியைச் சார்ந்தவர்கள் சுயேச்சையாகக் களம் இறங்கியிருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: உண்மை என்ன வென்றால், அங்கே கொள்கை உள்ளம் கொண்ட வர்களும் இருக்கிறார்கள்; பா.ஜ.க.வி னுடைய போக்கு பிடிக்காமல் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே, நாடாளு மன்றத் தேர்தலில், பா.ஜ.க.வோடு இவர்கள் கூட்டணி அமைத்த நேரத்தில், அந்தக் கூட்டணிக்குக்கூட உங்கள் பெயர் வைக்கக்கூடாது; எங்கள் பெயர்தான் வைக்கவேண்டும் என்று அமித்ஷா சொன்னபொழுது, அதற்குத் தலையாட் டியவர்கள் இவர்கள் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. அது ஒன்றே இதற்குப் பதிலாக இருக்கும்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment