பகுத்தறிவால் ஏற்படும் பலன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

பகுத்தறிவால் ஏற்படும் பலன்!

தந்தை பெரியார்



நான் சொல்லுவதை எல்லாம் பூரணமாக நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. யார் சொல் லுவதையும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும், எந்தத் துறையைப் பற்றி சொல்ப வர்களாய் இருந்தாலும், அவற்றை நம்முடைய சொந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். திருவள்ளுவர் இந்தப்படியே குற ளிலே கூறியிருக்கிறார்.


எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்றும்,


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்றும் மிகத் தெளிவாக, எப்படிப்பட்ட பொருளைப் பற்றியும், எப்படிப்பட்டவர் சொன் னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல், நம் முடைய  அறிவைப் பிரயோகித்து உண்மை யைக் கண்டறிய வேண்டும் என்று சொல்லியி ருக்கிறார். மற்ற ஜீவன்களுக்கும், மனித ஜீவ னுக்கும் இருக்கிற வித்தியாசமே மனிதன் சிந்திக்கும், பகுத்தறியும் பண்பு கொண்ட ஜீவன். எனவேதான், மனிதன் சிந்திப்பதனால், பகுத்தறி வினால் மாறுதல் அடைந்து கொண்டே இருக் கிறான். 2,000 வருடங்களுக்கு முன்பு இருந்த மனிதன் அந்த நிலைமையிலே இருந்து சகல துறைகளிலும் எவ்வளவோ மாறுதல் அடைந் திருக்கிறான். இன்னும் நாளுக்கு நாள் மாறுதல் அடைந்து கொண்டே இருக்கிறான். வசதிகளை யும், வாழ்வையும் பெருக்கிக் கொள்ளுகிறான். கட்டை வண்டியிலே போன மனிதன் இன்று கார், ரயில், ஆகாய விமானம் என்று பறக்கிறான். அதுபோலவே எண்ணெய் விளக்கு, குத்து விளக்கு என்று இருந்த மனிதன் இன்று லட்சம் பவர், 10 லட்சம் பவர் லைட் என்கிற மாதிரி உபயோகிக்கிறான். இந்த மாறுதல் எல்லாவற்றிற் கும் காரணம், என்னவென்றால் மனிதன் சிந்தனை அறிவு பெற்றிருப்பது தான் ஆகும். தன்னுடைய அறிவைத் தங்கு தடையின்றி தாரா ளமாக செலுத்திவதனால் மனிதன் புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்யவும், வசதிகள், முற் போக்குகள் பெறவும் முடிகிறது. 2,000 வருடங் களுக்கு முன் இருந்த மிருகங்கள், பறவைகள், மற்ற ஜீவராசிகள் எல்லாம் 2,000 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தனவோ அப்படித்தானே இருக்கின்றன. என்ன மாறுதல் அவை அடைந் திருக்கின்றன? அந்த காலத்தில் வேட்டிக் கட்டாத மிருங்கள் இப்போது வேட்டி கட்டி கொள்ளுகின்றனவா? இல்லையே! அப்படியே தானே இருக்கின்றன. எனவேதான் சொல்லுகி றேன். மற்ற ஜீவன்களைக் காட்டிலும் மனித ஜீவனுக்கு தனியாக விசேஷமாக அமைந்திருப் பது பகுத்தறிவு ஆகும்.


இந்தப் படியான பகுத்தறிவை அவரவர்கள் உபயோகிக்கிற முறையில்தான் பலன் ஏற்படும். எந்தச் சங்கதியாய் இருந்தாலும், அது இவர் சொன்னது, இது அவர் சொன்னது. ஆகவே இதைப் பற்றி சந்தேகப்படக் கூடாது, ஆராயக் கூடாது என்பதாக இல்லாமல் தாராளமாக அறிவை, ஆராய்ச்சியை செலுத்தினால்தான் முற்போக்குக் காண முடியும். அதில்லாமல் மகான்கள், ரிஷிகள், பெரியவர்கள் சொன்ன வற்றைச் சந்தேகிக்கக் கூடாது, ஆராயக் கூடாது என்றால், முற்போக்குக் காணவே முடியாது. தன்னுடைய அறிவைத் தாராளமாக செலுத்திய தால்  மேல்நாட்டுக்காரன் பல வசதிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. ரயிலை அவன்தான் கண்டுபிடித்தான்; மோட்டாரை, ஏரோப்பி ளேனை அவன்தான் கண்டு பிடித்தான். ரேடி யோவை அவன்தான் கண்டுபிடித்தான். பேசும் சத்தத்தைப் பெரிதாக்கிக் கொடுக்கும் ஒலி பெருக்கியையும் கண்டுபிடித்தது அவன்தான். இப்படியாக இன்றைய தேவைகள்,  விஞ்ஞான வசதிகள் முதலியவற்றையெல்லாம் கண்டுபிடித் தது அவன்தான். ஆனால், நாம் கண்டுபிடித் ததோ மேலே ஏழு லோகம், கீழே ஏழு லோகம், சாமிக்கு இத்தனை பெண்டாட்டி, இத்தனை வைப்பாட்டி என்பவைதான். காரணம், அவன் பகுத்தறிவைத் தாராளமாகப் பிரயோகித்தான்; நாம் நம்முடைய அறிவையே உபயோகப் படுத்தவில்லை. பெரியவர்கள் சொன்னது என்ற அளவிலேயே இருக்கிறோம். அதனாலேதான் 2,000 வருடங்களுக்கு முன்னும் நாம் சூத்திரர்; இன்றும் சூத்திரர். 2,000 வருடங்களுக்கு முன் பும் நாம் கீழ் ஜாதி. இன்றும் கீழ் ஜாதி. 2,000 வருடங்களுக்கு முன்பு நாம் உழைத்துப் போட பார்ப்பான் வயிறு உப்ப வேண்டியது; இன்றும் பார்ப்பான் நம் உழைப்பால், நம் மீது குதிரை யேறிப் பிழைக்கிறான். இப்படியாக நம்முடைய அறிவை உபயோகிக்காததால்தான் நாம் இன் னமும் கீழ்ஜாதி மக்களாக வாழ்வின் அடித் தளத்தில் இருந்து கொண்டு வேதனைப்படு பவர்களாக இருந்து வருகிறோம்.


எனவேதான், நான் சொல்லுகிறேன், யார், அது எப்படிப்பட்டவர்களாய்இருந்தாலும், எந் தச் சங்கதியைப் பற்றிச் சொன்னாலும் அது கடவுளைப் பற்றியதாக இருந்தாலும், மதத்தைப் பற்றியதாய் இருந்தாலும், பெரியவர்கள் சொன்னதாய் இருந்தாலும் அவற்றைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவற்றை நம் முடைய அறிவுக்குச் சரியென்று பட்டால் மட் டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிக் கில்லாமல் அவர் சொல்லுவது பொய்யா இருக் குமா? அவர்கள் சொல்லியதில் நம்முடைய அறிவைச் செலுத்தினால் நமக்கு நரகம் கிடைக்கும் என்று விட்டுவிடக் கூடாது என்று சொல்லுகிறேன்.


இந்த நாட்டு திராவிட மக்கள் - ஆதிமக்கள் சூத்திரர்களாக, கீழ்ஜாதிக்காரர்களாக, உழைத் துப் பார்ப்பானுக்குப் போட வேண்டியவர்களாக, மதத்தின் பேரால், சாஸ்திரத்தின்பேரால், கடவு ளின் பேரால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என் பதைத் தெளிவாக விளக்கி, நம்மை இழி ஜாதிக்காரர்களாக, பார்ப்பனருக்கு அடிமையாக ஆக்கி வைத்திருக்கும் கடவுளையும், மதத்தை யும், சாஸ்திரத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறி, பார்ப்பனர்கள், நம்மை எப்படி யெப்படி அடிமை கொண்டார்கள், மதத்தையும், சாஸ்திரத்தையும் எப்படி தங்கள் வாழ்வுக்கும், ஆதிக்கத்துக்கும் ஆக அமைத்துக் கொண் டார்கள்  என்பதை விளக்கியும், இந்து மதக் கடவுள்கள் என்பவற்றின் யோக்கியதை, அவை புரிந்ததாகச் சொல்லப்படும் திருவிளையாடல் கள் முதலியவற்றை விளக்கியும் பேசி, நம்ம வர்களின் சமுதாய அடிமைத்தனம் ஒழிய வேண்டுமென்றால் இவை அடியோடு ஒழிக்கப் பட வேண்டும்.


(18.1.1953 அன்று தந்தை பெரியார் அவர்கள் பெங்களூரில் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 29.1.1953)


No comments:

Post a Comment