மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
ஜூன் 1 ஆம் தேதியன்று விடுதலை 86 ஆம் ஆண் டில் அடியெடுத்து வைக்கிறது. இதுகுறித்த ஆசிரியர் அறிக்கையை 22.05.2020 விடுதலையில் படித்தோம்!
விடுதலை நாளிதழுக்கும், அதன் ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துகள்!
நேற்று அய்யாவுடன் தொலைப்பேசியில் பேசும் போது சரியான இணைப்புக் கிடைக்கவில்லை.
இரு தினங்களுக்கு முன் 'விடுதலை' குறித்து ஆசிரி யர் கூறிய சில கருத்துகளைப் பொதுச் செயலாளர் ஜெயக் குமார் அவர்கள் கூறினார்கள்.
1) ஊரடங்கு காலத்தில் இயக்கத் தோழர்கள் மட்டுமின்றி, பல்துறை ஆதரவாளர்களும் விடுத லையை வாசிக்கின்றனர். விடுதலையில் வரும் கருத்து களும், அதன் வாசிப்பு அனுபவங்களையும் அவர்களி டம் கேட்டு அறியலாம். அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க விடுதலை வாசிக்கும் நேயர்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்து, அவர்களைக் காணொலி மூலமாக இணைத்து உரையாடலாம்!
2) அதேபோல தமிழ்நாடு முழுவதும் இருக்கிற விடுதலை செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இவர்களுடன் ஒரு சந்திப்பைக் காணொலி வழி நடத் தலாம். விடுதலை நாளிதழை இவர்கள் மூலம் மட்டும் பல்லாயிரம் எண்ணிக்கையில் பரவச் செய்யலாம்.
3) கரோனா பிரச்சினை முடிந்தவுடன் "இணைய தள விடுதலை" ஒன்றைத் தொடங்கலாம். அதில் அவ்வப்போதைய செய்திகள், அந்தந்த ஊரில் நடை பெறும் நமக்குத் தேவையான நிகழ்வுகள், காணொலி கள், நேர்காணல்கள், மக்கள் கருத்துகள் என உடனுக் குடன் செய்திகளை வெளியிடலாம். அது பத்திரிகை வடிவத்தில் இல்லாமல் இணைய வடிவத்தில் மட்டுமே! இதற்கு நடைமுறை செலவுகள் எதுவும் கிடையாது. ஒரே ஓர் ஊழியர், அவருக்குக் கொஞ்சம் தட்டச்சும், ஒருங்கிணைப்பும் மட்டுமே! தமிழ்நாடு முழுக்க செய்தி யாளர்கள், புகைப்பட கலைஞர்களைப் பயன்படுத்தவும் இது வாய்ப்பாக இருக்கும்!
4) மேலும் விடுதலையை வாட்ஸ் அப் வழியில் படிக்க நிறைய பேர் கற்றுக் கொண்டனர். கரோனா பிரச்சினைக்குப் பின் இவர்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் வழி படித்தாலும், இவர்கள் கட்டி வரும் சந்தா தொகையை வேறொரு நண்பருக்கு அல்லது உறவின ருக்குக் கட்டிவிடலாம். ஆக வாட்ஸ் அப் மூலம் 1000 பேர் படிக்க, இவர்கள் கட்டும் தொகையின் மூலம் மேலும் புதிய 1000 வாசகர்கள் கிடைப்பார்கள்.
5) ஒரு செய்தியை ஒரு வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்தால் அது பொதுவான செய்தியாகப் போய்விடும். அதேநேரம் வாட்ஸ் அப் குழுவில் "ழிமீஷ் தீக்ஷீஷீணீபீநீணீst" என ஒன்று உள்ளது. இதில் 256 நபர்களை நாம் இணைத்துக் கொள்ளலாம். இக்குழுவில் நமது தோழர் களைத் தவிர நண்பர்கள், உறவினர்கள் மட்டும் இணைக்க வேண்டும். இந்தக் குழுவில் நாம் யாரை யெல்லாம் சேர்த்திருக்கிறோம் என்கிற தகவல் அவர்களுக்குத் தெரியாது. இந்தக் குழுவில் விடுதலை றிஞிதி கோப்பை "ஒரே ஒரு கிளிக்" 256 பேருக்கும் சென்றுவிடும். குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகப் போகும்.
இந்தக் குழுவிற்கு ஆசிரியர் அவர்கள் அறிக்கை யில் தெரிவித்ததைப் போல "விடுதலை வாட்ஸ்அப் வாசகர்" எனத் தலைப்பிடலாம்.
6) அவ்வகையில்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மண்டலத் தலைவர்கள் / செயலாளர்கள்
மாவட்டத் தலைவர்கள் / செயலாளர்கள்
இளைஞரணி / மகளிரணி / மாணவர் கழகம்
பகுத்தறிவாளர் அணி / பகுத்தறிவு ஆசிரியர் அணி
வழக்குரைஞர் அணி / தொழிலாளர் அணி
விடுதலை செய்தியாளர்கள் / புகைப்படக் கலைஞர் கள்
இவர்கள் தவிர இயக்க உறுப்பினர்கள் என எல் லோரும் ஒரு கைப் பிடித்தால் ஆசிரியர் அவர்களின் ஒன்றரை இலட்ச வாசகர்கள் எண்ணிக்கையை எளிதில் எட்டிப் பிடிக்கலாம்.
நன்றி அய்யா!
- வி.சி.வில்வம்
No comments:
Post a Comment