ஜூன் - 2020 'விடுதலை'யின் 86 ஆம் ஆண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

ஜூன் - 2020 'விடுதலை'யின் 86 ஆம் ஆண்டு!

'விடுதலை' சங்கிலியைப் பெருக்குவோம்! வாசகர்களை விரிவாக்குவோம்!



1935இல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட நாளேடு விடுதலை! உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடும் விடுதலை!


சிறப்புமிக்க இந்நாளேடு, தம் 86 ஆம் ஆண்டின் சீர்மிகு தோற்றத்தை ஜூன் முதல் நாளில்  இருந்து தொடங்க இருக்கிறது.


முடிந்த 85 ஆண்டுகளில் எண்ணிக்கையில் அடங்கா நெருக்கடிகளைச் சந்தித்தும், சாதனைகள் படைத்த ஏடுதான்  விடுதலை!


பெரியாரின் 85 ஆண்டு கால விடுதலையை, 58 ஆண்டு காலமாக அதன் ஆசிரியர் பொறுப்பேற்று பேணிப் பாதுகாத்து வருபவர் தமிழர் தலைவர் அவர்கள்.



விடுதலை எத்தனையோ செயற்கைத் தடைகளைத் தாண்டி வந்துள்ளது. பொருளியல் இழப்பு, நீதிமன்ற வழக்கு, ஆதிக்க எதிர்ப்பு, ஆட்சியர் எதிர்ப்பு, அரசியல் எதிர்ப்பு என விடுதலை கண்ட அடக்குமுறைகள் ஏராளம்.


இப்போது கரோனா வைரஸ் உலகத்தையே முடக்கி வைத்திருக்கிறது. விமானம் இல்லை, தொடர்வண்டி இல்லை, பேருந்து இல்லை, ஏன் மனிதர்களே இல்லை!


ஆனால் விடுதலைக்கு முடக்கம் இல்லை


கரோனா எங்களைச் சிறை வைத்திருந்த போதும், வீட்டினுள் "விடுதலை" யுடனே இருந்தோம்!


உண்மையைச் சொன்னால் இப்போது "விடுத லையை" விரும்புகிறவர்கள் பெருகி உள்ளனர். அஞ்சலில் வந்த போது சிலருக்குத் தாமதமாகக் கூட வரும். ஆனால் இப்போது மேலும் பொலிவோடு படைக்கப் படும் விடுதலை, பத்தாவது நொடிகளில் பார்வைக்கு வந்துவிடுகிறது;   பார்முழுக்கச் சென்று விடுகிறது!


தொடக்கத்தில் விடுதலை அனுப்புவதில் சிக்கல் இருந்தது. எந்தச் சூழ்நிலையையும் சரியாக மாற்றி அமைப்பவர்கள்  தான் பெரியார் தொண்டர்கள். ஆம்! பெரியாரின் தலைமை தொண்டர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாற்றி சிந்தித்தார்கள்.


அதன் விளைவு 8 பக்க விடுதலையை 4 பக்கமாக மாற்றி சென்னை, திருச்சி பகுதிகளில் முடிந்த வரை விநியோகிக்க செய்தது. பிற இடங்களுக்கும் கொண்டு செல்ல வாட்சப் மூலம் மதியம் 2.30 மணிக்குள் அனை வருக்கும் கிடைக்க கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் விடுதலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


ஊரடங்கில் விடுதலை பணியாளர்கள் அவரவர் இல்லத்தில் இருந்த படியே பணிகள் செய்தனர். தமிழர் தலைவர் அவர்கள் தினமும் காலை 2.30 மணி நேரம் ஒதுக்கி, வீட்டில் இருந்தே அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள், கட்டுரைகள் எழுதி அனுப்பி, மீண்டும் அதைச் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டார்கள்.


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் இல்லத்தில் இருந்த படியே எழுத்துப் பணியைச் செய்து வந்தார்கள்.


கரோனா தொற்றால் நாடே முடங்கிய நேரத்திலும் நமது தலைவர் மற்றும் பணியாளர்கள் முயற்சியால் விடுதலை தடையில்லாமல் நமக்குக் கிடைக்கிறது.


விடுதலையே நமக்கும், தலைமைக்கும் இணைப்புப் பாலம், ரத்த ஓட்டம். ஊரடங்கில்  முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, இந்த நேரத்தில் நமது தோழர்கள் வாட்ஸ் அப் வாயிலாக ஒரு தோழர் 50 பேருக்கு விடுதலையை அனுப்பலாம்!


அதாவது ஒவ்வொரு தோழரும் நண்பர்கள், உற வினர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவருக்கும் அனுப்பலாம். மேலும் உள்ளூரில் இருக்கும் வாட்சப் குழுக்களில் பகிர்ந்தாலும் அதன் மூலமும் 100 பேருக் குப் போகும்.


மேற்சொன்ன கணக்கில் சராசரியாக ஒரு தோழர் 100 புதிய நபர்களுக்கு அனுப்ப முடியும். தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள கழகத் தோழர்கள் 1000 பேர் இவ்வாறு அனுப்பினால் 1 இலட்சம் நபர்களை விடுதலையின் புதிய வாசகர்களாக விரிவாக்கம் செய் யலாம்


நான் தினமும் 50 தனி நபர்களுக்கு அனுப்புகிறேன். மேலும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் அமைப்புகள், காங்கிரஸ், தஞ்சாவூர் வட்டார செய்தி கள், மதச் சார்பற்ற கூட்டணி போன்ற வாட்சப் குழுக் களுக்குத் தினமும் அனுப்புகிறேன். அதன் மூலம் 500 நபர்களுக்கு குறையாமல் விடுதலை சென்றடைகிறது


தமிழர் தலைவரை உற்சாகமாக வைத்திருக்கும் மாமருந்து விடுதலை வளர்ச்சியே. எனவே விடுதலை வளர்ச்சியை நோக்கியே தோழர்களின் கடமை இருக்க வேண்டும்.


விடுதலை சங்கிலியை பெருக்குவோம்.


ஒரு இலட்சம் புதிய வாசகர்களை உருவாக்குவோம். விரிவாக்குவோம்.


விடுதலையின் விளைச்சலை அறுவடை செய் வோம்.


தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் செய்து முடிப்போம்! நன்றி!


கழகத் தலைவர் அறிக்கைக்கு இணங்க கழகத் தோழர்கள் உடனடியாக களத்தில் இறங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment