சென்னை, மே 9- வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூழலை உறுதி செய்வதற்கான அடிப்படைகளுக்கு அப்பால், ஃபோர்டு இந்தியா உள்ளூர் வழிகாட்டுதல்களின்படி, அதன் டீலர்ஷிப்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதால் வச திக்கு முன்னுரிமை அளிக்கப் போகிறது.
அதன்படி 1800-419-3000 என்ற ஹெல்ப்லைன் வழியாக மையமாகக் கட்டுப்படுத்தப்படும். அத்துடன் சேவை செயல் முறை யும் டெலிவரி, பிக்-அப் அல்லது டிராப் நேரத்தில் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும். மார்ச் 15 முதல் மே 30, 2020 வரை காலாவதியான அல்லது காலாவதியாகும் வாகன உத்தர வாதங் களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 2020 ஜூன் 30 வரை இலவசமாக நீட்டிப்பு வழங்கப்படும் என ஃபோர்டு இந்தியாவின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவையின் நிர்வாக இயக்குநர் வினய் ரெய்னா கூறினார்.
சமூக இடைவெளி மற்றும் சுகாதாரம்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
சென்னை, மே 9 விவசாயிகளுக்கு நாங்கள் இயங்கும் பகுதிகளில் சமூக இடைவெளி மற்றும் சுகாதாரம் போன்ற விழிப்புணர்வை அங்குள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்தி, உணவு மற்றும் பிற அடிப் படை வசதிகளை வழங்குகிறோம் என சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குனர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங் களில் ஒன்றாகிய சோனாலிகா டிராக்டர்ஸ் , சென்ற ஏப்ரல் (2020) மாதத்தில் 302 டிராக்டர்களை ஏற்றுமதி செய்து ஏற்றுமதி வணிகத்தில் தேசிய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கரோனா பாதிப்பையும் மீறி இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நிறைவடையாத எங்களது டிராக்டர்களுக்கான வாரன்டி காலகட்டத்தை நீட்டித்தல், பழுது நீக்குதல், தடையின்றி உதிரிபாகங்கள் கிடைத்தல், மாற்று மருத்துவர்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கினோம். அதுமட்டுமன்றி நாங்கள் இயங்கும் பகுதிகளில் சமூக இடைவெளி மற்றும் சுகாதாரம் போன்ற விழிப் புணர்வை அங்குள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்தி, உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்கினோம். மேலும் நாம் அனை வரும் ஒன்று சேர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவதன்மூலம் தற்போ துள்ள பிரச்சினை யிலிருந்து வலுவாகவும், சிறப்பாகவும், விரைவா கவும் மீண்டு எழ முடியும்" என்றார்.
No comments:
Post a Comment