சென்னை, மே 15 வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் முயற்சியில் சென்னை அமைந்தகரை பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரியார் தொண்டறம் சார்பில் திரட்டப்பட்ட பொருள்களைக் கொண்டு கடந்த 25.4.2020 அன்று சென்னை அமைந்தகரை பகுதியிலுள்ள தானி (ஆட்டோ) ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 125 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன, அதனை தொடர்ந்து மேலும் 12.5.2020 அன்று தூய்மைப் பணியாளர்கள், சுவர் வண்ணம் பூசுவோர் (பெயிண்டர்கள்) உள்ளிட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு ஒரு வாரத் தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் வழங்கினார். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி. முருகன், பெரியார் சமூகக் காப்பணி அமைப்பாளர் சோ. சுரேஷ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சாம்குமார், துர்கபிரகாஸ், மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், கர்ணா, சித்தார்த்தன், பகுதி திமுக வழக்குரைஞரணி துணை அமைப்பாளர் திவாகர், கொடையாளர் ராஜாகுமார், நித்தியகுமார் உள்ளிட்ட தோழர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment