ஜெனீவா, மே 15 கரோனா அப்டேட் உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் கண்டுபிடிக் கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்பு களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில்,உலகம் முழுவ தும் கரோனா வைரஸ் தாக்கு தலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந் துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை
3 லட்சத்தை தாண்டிள்ளது. தற் போதைய நிலவரப்படி, 45 லட் சத்து 20 ஆயிரத்துக்கும் அதிக மானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவியவர்களில் 25 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுப வர்களில் 45 ஆயிரத்து 566 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள் ளது.
No comments:
Post a Comment