உரத்தநாட்டில் கழகம் சார்பில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 15, 2020

உரத்தநாட்டில் கழகம் சார்பில் நிவாரண உதவிகள்


உரத்தநாடு, மே 15, ஒக்கநாடு மேலையூர் 'பாலா கன்ஸ்ட்ரக்சன்' உரிமையாளர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் சார்பாக ரூபாய் 80,000 (எண்பதாயிரம்) மதிப்பீட்டிலான 5 கிலோ அரிசி மூட்டை மற்றும் 3கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் திராவிடர் கழக உரத்தநாடு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், பெரியார் வீரவிளையாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நா.இராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரவிச்சந்திரன் ஆகியோரது முன்னிலையிலும்,  ஒன்றியக்குழு உறுப்பினர் ம.துரைராசு தலைமையிலும், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒக்கநாடு மேலையூர், சமயன்குடிக்காடு, மழவராயர் தெரு மற்றும் பெரியார் நகர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வி.அன்பரசு , ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக்கொண்டு உணவுப்பொருள்களை வழங்கி மகிழ்ந்தனர் .


 


No comments:

Post a Comment