பகுத்தறிவைத் தன் வாழ்வியலாகவும், தந்தை பெரியாரைத் தனது தலைவராகவும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த எமரால்டு கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு எதிர் நீச்சல்காரர். படித்து உயர் பட்டம் பெற்ற நிலையில் எல்லோரையும் போல அரசாங்க வேலைக்குப் போகாமல், 1982-ல் பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டு, எமரால்டு பதிப்பகத்தை ஆரம்பித்து அதில் வெற்றிகண்டவர். பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளை வகித்தவர். மனித நேயத்தோடு பலருக்கு உதவியவர். இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் "அறுவை சிகிச்சை வெற்றிபெற கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்" என்று சொன்னபோது “கடவுள் இல்லை, கடவுள் இல்லை " என டாக்டரிடமே அழுத்தம் திருத்தமாகச்சொன்னவர். அறுவை சிகிச்சை நன்றாக நடந்து குணமானவர். தனது வாழ்நாளின் இறுதி நொடி வரை பகுத்தறிவாளராக இருந்த அவர் கடைசியாக தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், நீங்கள் பிழைப்பது கடவுளின் கைகளில்தான் உள்ளது என்று சொன்னபோது 'அப்போ, பீஸையும் கடவுள்கிட்டேயே கொடுத்து விடலாமா?" என்று வாழ்வின் இறுதி நேரத்திலும் நகைச்சுவையோடு கேட் டவர். சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்த அவர், பகுத்தறிவாளர் கழகக் கூட்டங்கள் தொய்வின்றி நடக்க திராவிடன் நல நிதியில் பணம் போட்டு, அதில் இருந்து வரும் மாதத் தொகையில் கூட்டங்கள் நடக்க வகை செய்தவர்.
அத்தகைய சிறப்புக்குரிய எமரால்டு கோபால கிருஷ்ணன் அவர்களின் நினைவாக மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்று மார்ச்சில் அறிவித்தோம். கதைகளை அனுப்ப மார்ச்-31 கடைசி தேதி என்று குறிப்பிட்டிருந்தோம். மொத்தம் 160 சிறுகதைகள் போட்டிக்கு வந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகள், இலங்கை, அமெரிக்கா என உலகின் பல பகுதிகளில் இருந்தும் சிறுகதைகள் வரப்பெற்றோம். உற்சாத்தோடு கலந்து கொண்டு போட்டிக்கு தாங்கள் எழுதிய சிறுகதைகளை அனுப்பி வைத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் முதலில் நன்றியும் பாராட்டுகளும்.
160 சிறுகதைகளையும் பிரித்து 8 நடுவர்களுக்கு அனுப்பினோம். ஒவ்வொருவரும் 20 கதைகளைப் படித்து அதில் முதல் மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பினர். அப்படி வந்த 24 கதைகளையும் இரண்டு நடுவர்களுக்கு அனுப்பினோம். அவர்கள் 15 கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். பின்னர் மீண்டும் இரண்டு நடுவர்களின் மூலமாக இந்தப் போட்டிக்கு உரிய பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். விருப்பு, வெறுப் பின்றி நடுவர்களாகச் செயல்பட்டு பரிசுக்குரிய கதை களைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்!
முதல் மூன்று பரிசினைப் பெறும் கதைகள்:
முதல் பரிசு பெறும் கதை: புதிய பாதை _
-எழுத்தாளர்: கண்மணி ராஜா, இராசபாளையம்
இரண்டாம் பரிசு பெறும் கதை: ம(வி)ந்தை மனிதர்கள்_ -
எழுத்தாளர்: அய்.கிருத்திகா, திருச்சி-_1
மூன்றாம் பரிசு பெறும் கதை: கொடித்தடை - _
எழுத்தாளர்: சு.இரகுநாத், திருமங்கலம், மதுரை.
தொகுப்பில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:
1) துளசி - பிரியாகிருஷ்ணன், சென்னை-78
2) விசையுறு பந்தினைப் போல் - சரளா முருகையன், திருச்சி-23
3) தாயுமானவன் - த.வேல்முருகன், ஈரோடு
4) மகிழ்ச்சி - இளசு (டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ, அமெரிக்கா)
5) மனசு மாறிடுச்சு - டாக்டர் எஸ்.அகிலாண்ட பாரதி, சங்கரன் கோவில்.
6) சமரசம் உலாவும் இடமே - எஸ்.செல்வசுந்தரி, திருச்சி
7) பார்வை மாற்றங்கள் - எஸ்.பர்வீன் பானு, சென்னை.
8) தீட்டு - மோ.அருண், சென்னை
9) அவுத்துப்பாரு - பாட்டாளி, திருச்சி.
10) காலாவாதியான நளாயினிகள் - ம.வீ.கனிமொழி, அமெரிக்கா
11) ஒரு மனுசி ஓராயிரம் பைத்தியங்கள் - நா.கோகிலன், ஜோலார் பேட்டை.
12) நதிகளைக் கொண்டிருப்பவள் -மதுரா, தஞ்சாவூர்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் நன்றியும் பாராட்டும். இந்தக் கரோனா காலம் முடிந்தவுடன், சென்னை பெரியார் திடலில் பரிசுகள் வழங்கப்படும். மேலே தேர்ந்தெடுக்கபட்ட, பரிசுபெற்ற அத்தனை கதைகளும் 'உண்மை 'இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்படும். புத்தகமாகவும் வெளியிடப்படும்
முனைவர் வா.நேரு, தலைவர்,
கோ.ஒளிவண்ணன், துணைத்தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
No comments:
Post a Comment