முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அவர்களின் மகன் மை.காஜா பீர் முஹம்மது மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 15, 2020

முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அவர்களின் மகன் மை.காஜா பீர் முஹம்மது மறைவு

தொலைபேசிமூலம் தமிழர் தலைவர் ஆறுதல்



தமிழக முன்னாள் அமைச்சரும் பாளையங் கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், திராவிட இயக்க உறுதிமிக்கக் கொள்கையாளருமான டி.பி.எம். மைதீன்கான் அவர்களின் மகன் மை.காஜா பீர் முஹம்மது (வயது 55) 15.5.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


சென்னை மயிலாப்பூரில் நடுத் தெருவி லுள்ள அவரது இல்லத்தில் மரியாதை செலுத் தப்பட்டு, அன்னாரின் இறுதி நிகழ்வு இன்று (15.5.2020) வெள்ளிக்கிழமை  மாலை சென்னை, இராயப்பேட்டையில் (கப்ருஸ்தானில்) அடக்கம் செய்யப்பட்டது.


தகவல் அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேனாள் அமைச்சர் மைதீன்கான் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment