மறைவிற்குத் தமிழர் தலைவர் இரங்கல்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செய லாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங் கிணைப்பாளரும், மேலவையின் மேனாள் (தி.மு.க. ) உறுப்பினருமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் (வயது 90) மறைவு அறிந்து வருந்து கிறோம்.
பெரியார் திடலோடு நெருக்கமாக இருந்தவர். சமூகநீதி தொடர்பான நமது இயக்கம் நடத்திய போராட்டங்களில் ஆசிரியர் அணியினரையும் இணைத்துக் களத்தில் நின்ற போராளி அவர்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
14.5.2020
No comments:
Post a Comment