பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் கருத்துரை
அரியலூர், மே 15, அரியலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 9.5.2020 சனிக்கிழமை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் கூட்டத்தை துவக்கி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். இயக்கத்தைக் கால மாறுதலுக்கேற்ப நடத்த வேண்டியது குறித்தும், ஊரடங்கு நேரத்தில் கழகப் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி செய்து முடிக்க வேண்டும் என்றும், இயக்கத்தை வளர்ப்பது குறித்தும், இளைஞர்கள் உள்ளத்தில் பெரியார் குறித்த செய்திகளை கொண்டு சேர்க்க வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார். காணொலியில் கருத்தரங் கம் நடத்திடவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவிக்கரமளிக்கவும் தீர்மானிக் கப்பட்டது.
பங்கேற்றோர்: மண்டலத் தலைவர் இரா.கோவிந் தராஜன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.கார்த்திக், மாணவர் கழகப் பொறுப்பாளர் விஷ்ணு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் வளர்மதி, ஜெயங் கொண்டம் ஒன்றியச் செயலாளர் துரை.பிரபாகரன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன், ஆண்டிமடம் த.தர்மேந்தர், ஜெ.பிரபு, ப.சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, நகரத் தலைவர் அக்ரி.ஆறுமுகம், தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment