மக்களின் உயிரை விட மதுக்கடைகள் மூலம் வருவாய் திரட்டுவது முக்கியமானதா?
சென்னை, மே 15- அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் முதலில் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது.
பின்னர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின் பற்றப்படவில்லை எனக் கோரி தொடரப்பட்ட மனுக் களை விசாரித்து, ஊரடங்கு முடியும் வரை தமிழகம் முழு வதும் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட் டது. ஆன்லைன் மூலம் மட் டும் மது விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீடு செய் துள்ள அதே வேளையில், ஆன்லைன் மூலமும் மது விற்பனை நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து மனுக்களும் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என, ஏற்கெனவே டாஸ்மாக் தொடர்பான வழக்கை விசா ரித்த நீதிபதிகள் வினித் கோத் தாரி, புஷ்பா சத்திய நாரா யணா அடங்கிய இரு நீதிபதி கள் அமர்வு தெரிவித்திருந்த நிலையில், தற்போது டாஸ் மாக் தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் இருந்து மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமை யில் நீதிபதிகள் வினித் கோத் தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட 3 பேர் அமர்வு முன்பு டாஸ்மாக் தொடர்பான வழக்கு விசா ரணை வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, மக்களின் உயிரை விட வருவாய் திரட் டுவது முக்கியமானதா எனக் காட்டமாகக் கேள்வி எழுப் பினார். அமைதி, சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்காது. அரசியல் சாசன விதிகளை அமல் படுத்தும் கடமை நீதிமன்றங் களுக்கு உள்ளது தெரிவித் தார். இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் அவகா சம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதி பதிகள் இன்று (மே15)ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment