தென்காசி மாவட்டத்தில் கழகத்தில் புதிதாய் இணைந்த தோழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 15, 2020

தென்காசி மாவட்டத்தில் கழகத்தில் புதிதாய் இணைந்த தோழர்கள்


தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 13-5-2020 அன்று மாலை  6 மணியளவில் ஆலங்குளம் நகர திராவிடர் கழக செயலாளர் குமார் மூலம் புதியதாக  தோழர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். கி.ஞானராஜ் (ஆலங்குளம்), ழி.தேய்வராஜ் (ஆலங்குளம்), றி.முருகன் (ஆலங்குளம்), ரி.மல்லிகா (ஆலங்குளம்), ரி.மகேஷ் (ஆலங்குளம்), ஷி.சிவகுமார் (மாயமான்குறிச்சி), வி.முத்துசாமி (மாயமான்குறிச்சி), கி.அதிசயம் (நல்லூர்), பாக்கியராஜ் (ராம் நகர்) புதிதாக கழகத்தில் இணைந்த தோழர்களுக்கு  தென்காசி மாவட்ட கழகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து, கரோனா ஊரடங்கு காலத்திலும் இயக்க செயல்பாடுகள் நடைபெறுவது பற்றியும்  இயக்கத்தின் சார்பாக உதவிகள் செய்துவருவது குறித்தும், பல்வேறு மாவட்டங்களில் செயல்பாடு குறித்தும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 21 அம்சங்கள் என்னென்ன சொல்கிறது என்பதை விளக்கியும் கழகப் பொறுப்பாளர்களால் எடுத்துக் கூறப்பட்டது.


No comments:

Post a Comment