சென்னை, மே 15- கரோனா தொற்றுநோயின் பின்னணியில் அய்க்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு நம்பிக்கைக்குரிய செய்தி உள்ளது.
அல் ஆதில் வர்த்தகத்தின்தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் தனஞ்சய் தாதர், இந்தியாவுக்கு திரும்பிவரும் ஏழை பயணிகளின் விமான டிக்கெட் செலவுகளை ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், "கரோனா தொற்றுநோயின் பாதிப்பினால் தாய்நாட்டிற்கு செல்ல விரும்பும் அய்க்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் விமான டிக்கெட் செலவை ஏற்று கொள்ள முடியாமல் வசதியற்று உள்ளனர். அத்தகைய இந்தியர்களுக்கான டிக்கெட் செலவு மற்றும் கோவிட்சோதனை கட்டணங்களை ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளார். தனது தாயகத்திற்குச் செல்வதற்காக செலவுகளைச் சமாளிக்க முடியாதவர்களுக்கு உதவும் முயற்சியாக, விமான கட்டணம் மற்றும் சோதனைக்கட்டணங்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில் பல இந்தியர்களுக்கு உதவி செய்ய அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து செயல் பட்டு வருகிறேன். இந்திய தூதரக அதிகாரி விபுல் அவர்களிடம் பேசி இந்தியர்கள் தாய் நாடு திரும்ப முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்கிறார் தனஞ்சய் தாதர்.
இந்த குழுமத்தின் இந்திய நிறுவனம் மசாலா கிங் 700 வகையான உணவு பொருள்கள் தயாரித்து 'மயில்' பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறது.
No comments:
Post a Comment