தஞ்சாவூர், மே 15- தஞ்சாவூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பிறந்தநாள்விழா 29.4.2020அன்று காணொலி வழியாக சிறப்பாக நடை பெற்றது.
மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட திரா விடர் கழகச் செயலாளர் அ. அருணகிரி முன்னிலை வகித் தார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் ஆசிரியர் கோபு.பழனிவேல் புரட்சிக்கவிஞரின் ‘நூலைப் படி’ என்ற பாடலை இனிமை யாகப் பாடினார்.
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்கவுரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பாவ லர் பொன்னரசு ‘தூய்மை செய்’ எனும் பாடலைப் பாடி னார். கழகப்பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார் உரையினைத் தொடர்ந்து, கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் புரட் சிக்கவிஞரின் பல்வகைச் சிறப்புகளையும் எடுத்து ரைத்து பிறந்தநாள் கவிதையை வாசித்தார்.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு. இரா.குணசேக ரன் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த மாணவர் கழகத் தோழர் களுக்கு பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார். மாநில அமைப்புசெயலாளர் ஊமை.செயராமன் புரட்சிக்கவிஞ ரின் பாடல்வரிகளில் ஒளிர்ந் திடும் தன்மான உணர்வுகளை விளக்கினார்.
நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியாரின் தத்துவங்களைத் தமது புரட்சிக் கவிதையால் தமிழர்களின் உள்ளங்களில் விதைத்தவர் புரட்சிக்கவிஞர் என்றும், பார்ப்பன எதிர்ப்பு, இன உணர்வு, மொழிவுணர்வு, பெண்ணடிமை ஒழிப்பு என அவரது பாடல்வரிகள் உயர்ந்து நிற்பதையும் விளக்கி ஒன்றரைமணி நேரம் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மண்டல மகளிரணிச் செயலாளர் அ. கலைச்செல்வி, பகுத்தறிவா ளர் கழக மாவட்டத் தலைவர் ந.காமராசு, செயலாளர் ச.அழகிரி, தஞ்சை தெற்கு ஒன் றியச் செயலாளர் நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம், பூத லூர் ஒன்றியத் தலைவர் அல் லூர் பாலு, செயலாளர் புக ழேந்தி, திருவையாறு ஒன்றிய தலைவர் கண்ணன், செயலா ளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், உரத்தநாடு ஒன்றியத் தலைவர் த.செக நாதன், பெரியார்நகர் அ.உத்திராபதி, தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்ச் செல்வம், மாவட்ட இளை ஞரணி செயலாளர் கண்ணை. வெங்கடேசன், தமிழ்ப் பல் கலைக்கழக மாணவர் கழகத் தலைவர் மாதுக்கண்ணன், செயலாளர் லதா, சரபோசிக் கல்லூரி மாணவர் கழகத் தலைவர் குட்டி.வீரமணி, உரத்தநாடு ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் செ.அன்பு வீரமணி, நகர அமைப்பாளர் செ.பொழிலன், ப.யாழினி கு.குட்டிமணி ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தார்கள். இறுதியாக. தஞ்சை மாநகர மாணவர்கழக அமைப்பாளர் பிரின்சு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment