லக்னோ,மே16, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சரக்கு வண்டிகள் மூலமாகவும், நடந்தும் செல்கின்றனர். அத னால் பெரிதும் உடல்நலக் குறைவுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஊர டங்கால் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. எவ்வித வருவாயுமின்றி தவிக்கின்றனர். அத்தொழிலாளர்கள் எப் படியாவது சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என்கிற முயற்சியில், சரியான போக்கு வரத்து வசதி இல்லாத நிலையில், நடைபயணமாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ செல்கின்றனர். அப்போது பல்வேறு இன்னல்களை சந்திக் கின்றனர்.
இந்நிலையில் ராஜஸ் தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற லாரி, இன்று அதிகாலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்ற போது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத் துக்குள்ளானது. இவ்விபத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 22பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய தொழிலா ளர்களில் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
No comments:
Post a Comment