நிவாரணத் தொகுப்பை மாற்றியமைக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

நிவாரணத் தொகுப்பை மாற்றியமைக்க வேண்டும்

ராகுல் காந்தி வலியுறுத்தல்



புதுடில்லி,மே16, காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப் போது அவர் கூறியதாவது:-


ஊரடங்கால் தொழி லாளர்கள் நெருக்கடியில் உள்ளனர். அவர் களுக்கு உதவ வேண்டி உள்ளது. நெருக்கடியான இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பணம் தேவை. எனவே, பிரதமர் மோடி அறிவித்துள்ள நிவாரணத் தொகுப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 


நேரடி வங்கி பரிமாற்றம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிப்பது மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவதை பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் இந்த மக்கள்தான் நமது எதிர்காலம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment