கோவை,மே16, கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் திருப்பூரில் பனியன் உற்பத்தி நிறுவனத்தின் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் சரண் பாலாஜி (வயது 19). இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இதற்காக மகன் சரண் பாலாஜியை, நீட் தேர்வு சிறப்பு வகுப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர். இந்தநிலையில் வருகிற ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நீட் தேர்வை எழுத சரண் பாலாஜிக்கு விருப்பம் இல்லை. இதனால் அவரை பெற்றோர்கள் கண்டித்ததோடு, நீட் தேர்வு எழுத வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சரண் பாலாஜி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment