பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீருக்கான மருந்து
மும்பை,மே 16, இலெமுரியா அறக்கட்டளை சார்பில் மும்பை யின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கி வரும் நிலையில் தற்போது மும்பையின் தாராவிப் பகுதியில் கொரானா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளதால் அப் பகுதியில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகின்ற தமிழ் சித்த வைத்திய மருந்தான கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து லெமுரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் குறிப்பிட்டுள்ள தாவது:
16 வகை மூலிகைகளைக் கலந்து உரு வாக்கப்படும் பொடியை உரிய அளவில் நன்றாகக் காய்ச்சி ஏழு நாட்கள் தொடர்ந்து குடிப்பதின் மூலம் கரோனா தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற சித்த மருத்துவர்களின் அறிவுரையில் தயாரிக்கப்பட்ட மருந்து இதுவாகும். தமிழ் நாட்டிலும் நோய்த் தொற்று அதிகம் பரவி யுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறது. கரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்ட மாவட்டமான ஈரோடு மாவட்டம் தற்போது தொற்றில்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் உலகத் தமிழ்க் கழகம், திருக்குறள் தொண்டூழியம்- திருச்சி அமைப்பினருடன் இணைந்து மும்பையில் இயங்கும் இலெமுரியா அறக்கட்டளை முதல் கட்ட மாக மும்பை தாராவி, தானே பகுதிகளில் 14-.5.-2020 அன்று முதல் பொது மக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் மருந்தை வழங்கி வருகிறது.
தாராவியில் அறக்கட்டளையின் ஒருங் கிணைப்பாளர்கள் உ.பன்னீர்செல்வம், விவேக்ராஜா, இசக்கிவேல், சுரேஷ்குமார் ஆகியோரும் தானே மாநகராட்சிப் பகுதி களில் தானே தமிழ்ச் சங்க நிருவாகிகள் கி.தனுஸ்கோடி, சுப்பிரமணியன் ஆகியோ ரும் இந்தப் பணியினைச் செய்து வரு கின்றனர்.
இலெமுரியா அறக்கட்டளை மும்பை யின் 30க்கும் மேற்பட்ட இடங் களில் வாழும் ஏழை மக்களுக்கு இதுகாறும் 1,20,000 கிலோ உணவு தானியங்களை வழங்கி யுள்ளது.
இது தவிர தாராவியில் பசியால் வாடும் மக்களுக்கு தினமும் ஒரு வேளை உணவை கடந்த 16 நாட்களாக தொடர்ந்து வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment