கரோனா தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு அளித்த நிதியின் விவரம் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

கரோனா தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு அளித்த நிதியின் விவரம் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

கடலூர்,மே16, விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், நேற்று (மே15) கடலூரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து மனு அளித்தார்.


அதன்பின்னர் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கரோனாவின் தற்போதைய நிலவரம் குறித்து ஆட்சியருடன் பேசினேன். அப்போது நான் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தேன். அதில், 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக துவங்கி தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தேன். 


சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் உரையாற்றும் போது இந்தியாவை உலகம் பின்பற்றுவதாக மட்டுமே கூறும் அவர் கரோனாவால் ஏற் பட்டுள்ள பாதிப்புகள்,  பொருளாதார இழப்புகள், மருத்துவ ரீதியிலான கட்டமைப்புகள், மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, படுக்கைகள், சுவாசக் கருவி எவ்வளவு வாங்கப்பட்டுள் ளது என்பது போன்றவற்றை மத்திய அரசு விளக்க வேண்டும்.


தமிழகத்தில் வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.


இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


No comments:

Post a Comment