ஜூன் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு 29ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

ஜூன் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு 29ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

சென்னை,மே 27- கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட் டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங் கப்படுகிறது. முதல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதா ரர்களுக்கு 1000 ரூபாய் நிவா ரணத்துடன், அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை, சமை யல் எண்ணெய் ஆகிய பொருட் கள் இலவசமாக வழங்கப்பட் டன. அதன்பின்னர் அடுத்த மாதத்தில் உணவுப்பொருட் கள் மட்டும் இலவசமாக வழங்கப்பப்பட்டன. ஜூன் மாதமும் உணவுப்பொருட் கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


கடைகளில் தனிமனித இடைவெளியை பொதுமக் கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமா கவும், தினமும் குறிப்பிட்ட அளவு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி பொருட்கள் வழங்கப்படுகின்றன.


அவ்வகையில், ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக் கன் வரும் 29ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்கு வார்கள் என்றும் அறிவித் துள்ளார்.


அந்த டோக்கனில் பொருட் கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக் கும். டோக்கனில் குறிப்பட்டு உள்ளபடி ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட் களை வாங்கலாம் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment