கொரோனா காலத்தில் ஓய்வு ஆண்களுக்குத்தான். பெண்களுக்கு வீட்டு வேலைகள் கூடியிருக்கின்றன. பேரப்பிள்ளைகளுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்குகிறேன். குடியுரிமை மசோதா தொடர்பாக விளக்க நூல் ஒன்றை “இந்திய குடியுரிமைச் சட்டம் எதிர்வரும் ஆபத்து” என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் வெளிவரும்.
படிக்கும் புத்தகங்கள் எவை?
நிவேதிதா எழுதிய “முதல் பெண்கள்”, “லட்சுமி எனும் பயணி”, “கால அதிர்வுகள்”, “கருப்பு ஜுலை”.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பற்றிய வரலாற்றை எனது பார்வையில் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று 4300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு பெண் மதகுரு பற்றி பேசியிருக்கிறேன். அவர்களின் வேலை கடவுள்களை படைப்பதுதான். அந்த அம்மாவால் படைக்கப்பட்ட கடவுள்தான் இனானா. அதிலிருந்து ஈசா என்ற கடவுள் வந்தது. அதுதான் பின்னாடி அகோரடைஸ் கடவுளாக மாறியது. இந்த வரலாறு குறித்த தரவுகளைப் படிப்பதற்காக இணையத்தில் நேரத்தை செலவழிக்கிறேன்.
- எழுத்தாளர் ஓவியா
No comments:
Post a Comment