பெரியார்பற்றி ‘தினமலர்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 11, 2020

பெரியார்பற்றி ‘தினமலர்!'

10.5.2020 நாளிட்ட ‘தினமலர்' நாளேட்டில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் (பக்கம் 5) கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளது.


கட்டுரை ஆசிரியர் டாக்டர் அ.பிரபுராஜ்.


‘எதையும் வித்தியாசமாய்ச் சிந்தித்துச் செயல்பட்டால், அது மக்கள் மனதைக் கவரவே செய்யும்' என்பதற்கு ஒரு உதாரணம்....


மதுவிலக்குப் பிரச்சாரத்தில் யாரும் நினைத்தறியாத ஒரு புதிய கோணத்தில் 1921 இல் செயல்பட்டவர் ஈ.வெ.ரா. மறியல் செய்து பிறரது உடைமைகளைச் சேதம் செய்யவில்லை அவர்.


மாறாக, மது ஒழிப்பிற்காக, தன் சொத்தையே அழித்தார்; தன் தென்னந்தோப்பு மரங்களை அவர் வெட்டிய நிகழ்ச்சி, ஈரோட்டையே ஒரு கலக்கு கலக்கியது - மக்களிடையே ஒரு புதிய உத்வேகம் பிறந்தது.


தமிழகம் முழுவதும் கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரம் அடைந்தது. அரசு விழித்துக் கொண்டது.


No comments:

Post a Comment