செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 11, 2020

செய்தித் துளிகள்....

* மேட்டூர் அணையை ஜூன் 12 அன்று திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு வேளாண் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.


* கரோனா விழிப்புணர்வு வினாடி வினாவில் பங்கேற்க மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. (http://quiz.mygov.in)


* பெரியம்மை ஒழிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதையொட்டி உலக சுகாதார அமைப்பும், அய்.நா.வும் இணைந்து நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளன.


* அமெரிக்கா மீண்டு வர அதிகக் காலம் தேவைப்படும் என்கிறார் அதிபர் தேர்தலுக்கு அமெரிக்காவில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோபிடன்.


* மது போதையால் ஒருவர் கொலை - மூவர் கைது - இது பண்ருட்டி அருகே!


* ஹிந்துக் கடவுள்கள்பற்றி ஏதோ அவதூறாக நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டாராம் - அதற்காக காவல்துறையில் ஒரு புகாராம்.


* ஊரடங்கு காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 446 வழக்குகளிலும்- கீழமை நீதிமன்றங்களில் 10 ஆயிரம் வழக்குகளிலும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


* கோயம்பேடு சந்தை நோய்த் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டோர் 2,167.


* கரோனா தொற்றுப் பரிசோதனைக்காக 11 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை தமிழ்நாடு அரசு வாங்குகிறது.


* பாலியல் தொல்லை, ஆபாசப் படப் புகாரில் 70 வயது பூசாரி உள்பட நால்வர் கைது.


* 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகளை இயக்கினால், கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.15 இழப்பு ஏற்படும் என்று தமிழகப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.


* எவரெஸ்ட் சிகரம் திபெத்தில் உள்ளது என்று சீனா கூறுவதற்கு இந்தியாவும், நேபாளமும் கண்டனம்!


வி மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி.


No comments:

Post a Comment