மராட்டிய மாநிலத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

மராட்டிய மாநிலத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

சென்னை, மே 10- மராட்டிய மாநிலத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வழக்குரைஞர் சூரியப்பிரகாசம் சமூக ஆர்வலர் என்கிற முறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அதில், மராட்டிய மாநிலத்திலுள்ள சாங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் கணேசன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.


வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து மராட்டிய மாநிலத் துக்கு சென்றவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக ஊர் திரும்ப முயலுகையில், தமிழகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அனை வரும் தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டுமென மராட் டிய மாநில அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அங்கி ருப்பவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக மனுவில் குறிப் பிட்டுள்ளார்.


கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில் ஏழை தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


தமிழகத்தில் 11 மாவட்டங்களில்


மழை பெய்ய வாய்ப்பு


சென்னை, மே 10- சென்னை வானிலை ஆய்வு மய்ய அதிகாரிகள் கூறியதாவது:


தமிழகத்தில் வெப்பச் சலன த்தால் அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 11 செமீ, குழித்துறை, சிவலோகம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, கொட்டாரத்தில் 7 செமீ, கன்னியாகுமரியில் 6 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஆயக் குடியில் 5 செமீ மழை பதிவானது.


வெப்பநிலையை பொறுத்த வரை மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திரு வள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட் களுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி பதிவாக வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகபட்சமாக சேலத்தில் 105 டிகிரி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி வெயில் பதிவானது.


No comments:

Post a Comment