முகக்கவசங்கள் விற்பனை விலையில் மோசடி அம்பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

முகக்கவசங்கள் விற்பனை விலையில் மோசடி அம்பலம்


புதுடில்லி, மே 10- கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை யாக ஊரடங்கு நடை முறைப்படுத் தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அனைவருமே முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும், மீறுப வர்களுக்கு அபராதம் தண் டனை உள்ளிட்ட அறிவிப்பு களை அரசுகள் வெளியிட்டு ஸ்ள்ளன. இந்நிலையில், முகக் கவச விற்பனையில் பெரும் அளவிலான மோசடி நடந் துள்ளது அம்பலமாகியுள் ளது.


கரோனாவை எதிர்த்து முன்களத்தில் நின்று போரா டும் மருத்துவ பணியாளர் களுக்கு அத்தியாவசிய தேவை களில் ஒன்றான என்-95 முகக் கவசத்தில் பெரும் முறைகேடு நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது.


கடந்த ஜனவரியில் வெறும் ரூ.17க்கு விற்ற இந்த முகக்கவசத்தை இப்போது ரூ.300, ரூ.400 என அதிகமான விலை வைத்து விற்கின்றனர். கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள் ளவும், பிறருக்கு பரவாமல் தடுக்கவும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாய மாகி உள்ளது. இதில், கரோனா நோயாளிகளை நேரடியாக சந்திக்கும் மருத்து வர்கள், செவிலியர்கள் உள் ளிட்ட மருத்துவ பணியாளர் கள் என்-95 மற்றும் அதற்கு இணையான முகக்கவசம் அணிவது அவசியமாகும்.


இந்த முகக்கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் கரோனா அதிகரிக்க தொடங்கியதுமே கடந்த மார்ச் மாதம், என்-95 முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும் பதுக்குதல், கருப்பு சந்தைப்படுத்தல் மற் றும் அதிக லாபத்திற்கு விற் றல் ஆகியவற்றைத் தடுப்பதற் காக அத்தியாவசிய பொருட் கள் சட்டத்தின்கீழ் முகக் கவசம் மற்றும் சானிடைசர் களை அரசு கொண்டு வந்தது. இதை மீறினால் ஏழு ஆண்டு கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இத்தகைய, கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், என்95 முகக்கவச விற்பனை விலை யில் நடைபெறுகின்ற மோச டியை தடுக்க முடியவில்லை. கரோனாவால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண் டிய சூழலை தங்களுக்கு சாத கமாக பயன்படுத்திக் கொண்டு உற்பத்தி நிறுவனங்களும், விநியோக நிறுவனங்களும் கொள்ளை லாபம் பெறுகின் றன.


மும்பையை சேர்ந்த சில தன்னார்வ அமைப்புகள் முன்கள வீரர்களுக்கு முகக் கவசங்களை  இலவசமாக வழங்குவதற்காக அதனை உற்பத்தி செய்கின்ற நிறு வனங்களிடமிருந்து கொள் முதல் செய்ய முயன்றபோது இத்தகவல்கள் வெளிவந்துள் ளன.


இதுகுறித்து தன்னார்வ அமைப்புகள் கூறியதாவது: மும்பையில் 2 நிறுவனங்கள் மட்டுமே என்95 மற்றும் அதற்கு இணையான முகக் கவசங்களை உற்பத்தி செய் கின்றன. அந்நிறுவனங்கள் கடந்த ஜனவரியில் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திற்கு ஓர் என்-95 முகக்கவசம் ஒன்றின் விலை ரூ.17.33 என்ற அளவில் 92,500  எண்ணிக்கையில் ரூ.16 லட்சத் திற்கு விற்றுள்ளது. 


ஆனால் நாங்கள் நேர டியாக அந்நிறுவனங்களை அணுகியபோது, அனைத்து முகக்கவசங்களையும் அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் முன்பதிவு செய்துவிட்டதாக கூறியது. சில அரசுத் துறை களின் உதவியோடு அணுகிய போது சில ஆயிரம் முகக்கவ சங்களை வாங்க முடிந்தது. அவை ரூ.40, ரூ.60 விலைகளில் கிடைத்தன.


ஆனால் அதே முகக்கவ சங்கள் வெளிச்சந்தையில் ரூ.300, ரூ.400க்கு விற்கப்படு கின்றன. முன்கள வீரர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் வரும் தன்னார்வலர்கள் முகக்கவசத்தின் விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதிகவிலை என்றாலும் அவற்றை வாங்கி தங்களால் இயன்ற உதவியை செய்கின் றன. ஆனால் இந்த சந்தர்ப் பத்தை தங்களுக்கு சாதகமா கப் பயன்படுத்தி உற்பத்தி நிறுவனங்களும், விநியோக நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. இவற்றை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.


இவ்வாறு அந்த அமைப் புகள் குற்றம்சாட்டின என் பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment