சென்னை, மே 19, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2020 முற்பகல் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் கரோனா வைரசு நோய் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் குடும்பத் தலைவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த, தனிமைபடுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற நிவாரண (அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருள்கள்) உதவிகளை தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் வழங்கினார். அய்ஸ் அவுஸ் சதீஸ் உடன் இருந்து பணியாற் றினார். மேலும் நிவாரண பணிக்காக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment