நோய்த் தொற்றை தடுக்க இணையதள பாதுகாப்பு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 9, 2020

நோய்த் தொற்றை தடுக்க இணையதள பாதுகாப்பு திட்டம்

சென்னை, மே 9-  ஆன்-லைனை பாதுகாப் பான முறையில் பயன்படுத்துவது குறித்த பயனுள்ள தகவல்கள் அடங்கிய இணைய தளத்தை கூகுள் இந்தியா வடிவமைத்து உள்ளது. இணையதளத்தை பயன்படுத் துவதும் போது பின்பற்ற வேண்டிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


இணையதளத்தில் தொடர்ந்து நடத் தப்பட்டு வரும் புதிய புதிய முறைகேடுகள், மோசடிகளை கூகுள் நிறுவனத்தின் ஆய் வுக் குழுவானது தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. அதாவது, கோவிட் 19 வைரஸ் தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போல இணையத்தில் உள்ளே நுழைந்து போலியான தகவல் களைப் பரப்பும் புதிய வழியிலான முறை கேடுகள் செய்யப்பட்டு வருவதை கண்டறிந் துள்ளது.


கோவிட் 19 நோய்த் தொற்று தொடர் பான மோசடிகளை எப்படி கண்டறிவது: கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக நமக்கு வரும் எந்த வகையான மின்னஞ்சல்களையும் திறப்பதற்கு முன் பாக அதுகுறித்து நன்கு யோசிக்க வேண் டும். அதுபற்றி மதிப்பீடு செய்வது முக்கியம். குறிப்பாக, வீட்டு முகவரிகள் மற்றும் வங் கித் தகவல்கள் தொடர்பாக கோரப்பட்டு வரும் மின்னஞ்சல்கள் மீது மிகுந்த கவ னத்துடன் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment