செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

செய்தித் துளிகள்....

* திருமண விழாவில் 50 பேர் கலந்துகொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.


* இறுதிச் சடங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; அதிகபட்சம் 20 பேர் கலந்துகொள்ளலாம்.


* பொது இடங்களில் மதுபானங்கள் அருந்தக் கூடாது; புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.


* வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


* அதிதீவிரமாகி ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் ‘ஆம்பன்' புயலால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.


* கரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.


* தனியார் பள்ளி ஆசிரியர்கள் 21 ஆம் தேதி பள்ளிக்கு வர உத்தரவு.


* முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கவேண்டும் என வியாபாரிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.


* தமிழகத்தில் நேற்று மதுரை, தருமபுரி, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 73 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக திருச்சியில் 105.98 டிகிரி வெயில் கொளுத்தியது.


* சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 44 வயது பெண் டைபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற அதிர்ச்சியில் உயிரிழந்தார்.


* கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனா வூகான் நகரில் பரவிய கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பின்னர், தற்போதுதான் பள்ளிகள் திறக்கவும், விமான சேவை தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


* சீன நாட்டின் தலைநகரமான பீஜிங்கில் இனி பொது வெளியில் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment